இஷான் கிஷன் 200 அடிச்சிருந்தாலும், நான் ஏன் சுப்மன் கில்லுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுத்தேன்? – ரோகித் சர்மா பேட்டி!

0
895

பல விமர்சனங்கள் வந்திருந்தாலும், இஷான் கிஷனை வெளியில் அமர்ந்து விட்டு சுப்மன் கில்லை பிளேயிங் லெவனில் தொடர்ந்து விளையாட வைத்ததற்கு காரணம் இதுதான் என்று ரோகித் சர்மா பேசியுள்ளார்.

நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களை 50 ஓவர்கள் முடிவில் அடித்திருந்தது. இந்த இலக்கை சேஸ் செய்த நியூசிலாந்து அணி கடைசி வரை போராடி 12 ரன்கள் வித்தியாசத்தில தோல்வியை தழுவியது.

- Advertisement -

இளம் வீரர் சுப்மன் கில், இலங்கை ஒருநாள் தொடரில் இருந்த பார்மை இங்கும் தொடர்ந்தார். அடுத்தடுத்து சுதங்கள் விளாசி அசத்தினார். இந்தமுறை சதத்தை இரட்டை சதமாக மாற்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் மற்றும் இளம் வீரர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். இப்போட்டியில் 145 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். 149 பந்துகளில் 19 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் உட்பட 208 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

இவை ஒருபுறம் இருக்க, வங்கதேச ஒருநாள் தொடரின் 3வது போட்டியில் இரட்டை சதம் அடித்து பல வரலாறுகள் படைத்த இஷான் கிஷன், பிளேயிங் லெவனில் நிரந்தர இடம்பிடிப்பார் என்று பலரும் எண்ணினர்.

- Advertisement -

ஆனால் இலங்கை ஒருநாள் தொடரில் சுப்மன் கில் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். கிஷான் கிஷானுக்கு பிளேயிங் லெவனில் கூட வாய்ப்பில்லை.

இரட்டை சதம் அடித்து அபாரமான பார்மில் இருக்கும் இஷான் கிஷான் வெளியில் அமர்த்தப்படுவது நியாயமான தேர்வு முறை அல்ல என்று பலரும் விமர்சித்தனர். ஆனால் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் இந்த விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல், இலங்கை தொடரில் கில் மீது நம்பிக்கை வைத்து களம் இறக்கினர்.

கில், இலங்கை தொடரில் ஒரு சதம் மற்றும் அரைசதம் உட்பட மூன்று போட்டிகளில் 200+ ரன்கள் அடித்தார். அந்த பார்மை தற்போது நியூசிலாந்து தொடரிலும் தொடர்கிறார். முதல்முறையாக இரட்டை சதம் அடித்து பல விமர்சனங்களுக்கு தனது பாணியில் பதிலும் கூறி இருக்கிறார்.

இந்நிலையில் எந்த நம்பிக்கையில் இஷான் கிஷனுக்கு பதிலாக சுப்மன் கில் பிளேயிங் லெவனில் எடுத்துவரப்பட்ட காரணம் என்னவென்று நியூசிலாந்து அணியுடன் நடந்த முதல் ஒரு நாள் போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது:

“இலங்கை தொடருக்கு முன்பு அவர் நல்ல பார்மில் இருந்தார். அந்த பார்மை பயன்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே தொடர்ந்து அவருக்கு உறுதுணையாக நின்று வாய்ப்புகள் கொடுத்தோம். நல்ல பார்மில் இருக்கும் வீரரை, உடனடியாக வெளியில் அமர்த்தக்கூடாது. அது எங்களுக்கு சரி என்று தோன்றவில்லை. அதன் காரணமாக தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தோம் அதை பயன்படுத்திக் கொண்டு நன்றாக விளையாடியுள்ளார். இன்றைய போட்டியில் அவரது பேட்டிங் நேர்த்தியாக இருந்தது அனாயசமாக பந்துகளை எதிர்கொண்டு பவுண்டரிகள் விளாசினார்.” என்றார்.