20 மாதங்களுக்குப் பிறகு அஸ்வினுக்கு ஏன் வாய்ப்பு? உ.கோ அணியில் இருப்பாரா? – அஜித் அகர்கர் பதில்!

0
8186
Ashwin

இந்திய அணி ஆசியக்கோப்பையை வென்று வெற்றிகரமாக முடித்திருக்க, ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்க அணியிடம் ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது.

இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு முன்பாக, இந்திய அணியுடன் இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த மூன்று போர்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் கம்மின்ஸ், ஸ்மித், ஸ்டார்க், மேக்ஸ்வெல் என எல்லா நட்சத்திர வீரர்களும் திரும்பி வந்திருக்கிறார்கள். கூடவே ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் கழட்டி விடப்பட்டிருக்கிற மார்னஸ் லபுசேனும் வந்திருக்கிறார்.

இந்த நிலையில் உலகக் கோப்பை வெகு அருகில் இருக்க, தற்பொழுதுதான் ஆசிய கோப்பை தொடர் விளையாடி முடித்திருக்க, இந்திய அணிக்கு இது தேவையில்லாத தொடர் இன்று பலராலும் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களுக்கு இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்திப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகளுக்கு கேப்டனாக கேஎல்.ராகுல், துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா இருக்கிறார்கள். மேலும் முதல் இரண்டு போட்டிகளில் காயத்தின் காரணமாக அக்சர் படேல் இடம்பெறவில்லை.

மூன்றாவது போட்டிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட எல்லா வீரர்களும் திரும்புகிறார்கள். மூன்று போட்டிகளிலுமே தமிழகத்தைச் சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்தத் தேர்வு குறித்து பேசி உள்ள தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்கர் கூறும் பொழுது “ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அணியை சுற்றி எப்பொழுதும் இருக்கிறார்கள். மேலும் ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரும் இருந்தார்கள். இந்த வீரர்களுக்கு கொஞ்சம் மனரீதியான ஓய்வு தேவை.

இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு, எல்லா வீரர்களும் திரும்ப வந்து விடுவார்கள். மேலும் ஆசியக் கோப்பையில் விளையாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு ஆஸ்திரேலியா தொடரில் விளையாட வாய்ப்பு தரப்படும்.

தற்பொழுது அக்சர் படேல் காயத்தில் இருக்கிறார். இரண்டு போட்டிகள் முடிந்து அவரது காயம்குணமாகாமல் இருந்தால், உலகக் கோப்பைக்கு சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களை கொண்டு செல்வதற்காக, மேலும் அவர்களுக்கு விளையாட்டு பயிற்சி கொடுப்பதற்காக, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!