“பெரிய விசில் அடிங்க…” தல தோனியை கொண்டாடும் தமிழ்நாடு.? இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி!

0
1007

மார்ச் 31ம் தேதி முதல் துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. 74 போட்டிகளைக் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசனில் குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது சிஎஸ்கே.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று மும்பை அணியின் ஐபிஎல் சாதனையை சமன் செய்திருக்கிறது சென்னை. மேலும் மும்பை அணியை விட இரண்டு சீசன்கள் குறைவாக விளையாடிய அணி சென்னை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மொத்தமாக 16 ஐபிஎல் சீசன் களில் 14 சீசனில் பங்கேற்று இருக்கும் சென்னை அணி அதில் பத்து முறை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. நேற்றைய போட்டியுடன் சேர்த்து ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .

ஐபிஎல் போட்டிகள் துவங்கிய. 2008 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை சென்னை அணியை வழி நடத்தி வருபவர் எம்எஸ் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் இருந்தே தோனி இந்த வருட ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்காக அவர்களுக்கு ஏதேனும் பரிசு கொடுத்தே ஆக வேண்டும் என்று கூறினார். இதிலிருந்து அடுத்த வருட ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் தோனி பங்கேற்பது உறுதியாகி இருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் எம்எஸ் தோனி குறித்தான தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். அந்தப் பேட்டியின் போது பேசியிருக்கும் அவர் “அடுத்த வருட ஐபிஎல் போட்டிக்கு மகேந்திர சிங் தோனி இன்னும் ஸ்ட்ராங்காக வருவார் என தெரிவித்திருக்கிறார். இந்த வருடம் அவரது பிட்னஸில் சில பிரச்சினைகள் இருந்தது. ஆனால் அடுத்த வருடம் இன்னும் வலிமையாக அவர் ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகி வருவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ஹர்பஜன் “இந்த சிஎஸ்கே அணியால் எந்த மாதிரியான சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்பது நேற்றைய போட்டியின் மூலம் தெளிவாகி இருக்கிறது. அடுத்த வருடம் உங்களுடைய தல சிறப்பாக வருவார் வந்து உங்களுக்கு மீண்டும் வெற்றியை தருவார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் தோனி குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி” எம். எஸ் தோனி 250 போட்டிகளுக்கும் மேல் ஆடி இருக்கிறார் என்பதிலிருந்து அவரது பிட்னஸ் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் தோனியின் மரபை யாராலும் அழிக்க முடியாது. இந்தியாவின் வடகிழக்கு மாகாணத்தைச் சார்ந்த ஒரு வீரரை இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலம் தலைவனாக ஏற்றுக் கொண்டாடுகிறது என்றால் அதிலிருந்து அந்த வீரரின் மாண்பை தெரிந்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.