“ரிஷப் பண்ட் ஏன் ஆடல? யார் இதற்கு காரணம்?” ரிப்போட்டர் கேள்விக்கு – ஜட்டு கொடுத்த ஷாக் பதில்!

0
125

முதல் போட்டியில் ரிஷப் பண்ட் ஏன் ஆடவில்லை? அடுத்த போட்டியில் அவர் இருப்பாரா? என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரவீந்திர ஜடேஜா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பதில் அளித்து இருக்கிறார்.

ஆசிய கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா – பாகிஸ்தான அணிகள் மோதின. இதில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் நல்ல பார்மில் இருக்கும் ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பர் ஆக செயல்பட்டார். போட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் ரிஷப் பண்ட் எடுக்கப்படாதது குறித்து கேள்விகள் நிலவி வருகின்றன.

- Advertisement -

இரண்டாவது போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. போட்டிக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது அவரிடம், ரிஷப் பண்ட் ஏன் எடுக்கப்படவில்லை? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “எனக்கு அது பற்றி சுத்தமாக தெரியாது. இது என்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி அல்ல.” என்று பதிலளித்தார். பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவு இதுவாகும். அணி நிர்வாகம் ஏதேனும் ஒரு காரணத்தினால் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என்றும் தனது பதிலை அவர் கூறினார்.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்த இரு அணிகளும் மோதின. அப்போது இந்தியாவிற்கு ஹாங்காங் அணி தனது பேட்டிங் மூலம் மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியதும் வரலாறு ஆகும். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 285 ரன்கள் அடித்து ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த இலக்கை துரத்திய ஹாங்காங் அணிக்கு துவக்க வீரர்கள் விக்கெட் இழப்பின்றி 174 ரன்கள் அடித்தனர்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவி மோசமான வரலாற்றை படைக்குமோ? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுழல் பந்துவீச்சாளர் சகல் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது இருவரும் அபாரமாக பந்துவீசி இந்திய அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு எடுத்து வந்தனர். இறுதியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் சிறிது நேரம் அச்சத்தை ஏற்படுத்திய ஹாங்காங் அணி, நாங்கள் எளிதானவர்கள் அல்ல எங்களிடமும் திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தது போன்று அந்த ஆட்டம் இருந்தது.

- Advertisement -

இம்முறை ஆசியகோப்பை டி20 தொடரில் இவ்வரு அணிகளும் மீண்டும் மோதுகின்றன. இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ஜடேஜா கூறுகையில், “அடுத்த போட்டியிலும் நல்ல மனநிலையில் நாங்கள் விளையாட உள்ளோம். அதேபோல் எளிதான அணி என்று அவர்களை அவ்வளவு எளிமையாக எடுத்துக் கொள்ள மாட்டோம். டி20 உலகில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகையால் எப்போதும் போல தீவிர பயிற்சி மற்றும் நல்ல மனநிலையில் இருப்பதற்கு முயற்சிக்கிறோம். அப்போதுதான் எங்களது முழு திறமையை வெளிப்படுத்த முடியும்.” என்று பேசினார்.