“ஜடேஜா எதுக்கு? சூரிய குமாருக்கு வேற ஆளை எடுக்கலாம்!” – திடீரென கம்பீர் சரமாரி தாக்கு!

0
3210
Gambhir

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது இருந்து, தினம் ஒரு விமர்சனம் இந்திய அணி மேல் வந்து கொண்டே இருக்கிறது.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாகவே விளையாடுகிறது. இதுவரை ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் விளையாடிய அணிகளில் இந்த இந்திய அணியை சிறந்தது என்று கூறப்பட்டது.

- Advertisement -

எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்திய அணியின் பந்து வீச்சு படை மிகச் சிறப்பானதாக இருந்தது. பந்துவீச்சுப் படையில் இருந்த ஐந்து பந்துவீச்சாளர்களுமே விக்கட் கைப்பற்ற கூடியவர்களாக இருந்தார்கள். யாருமே அரைகுறை பந்துவீச்சாளர்கள் கிடையாது.

இப்படியான காரணங்களால் இந்திய அணியின் செயல்பாடு மிக வீரியமான ஒன்றாக களத்தில் அமைந்தது. பந்துவீச்சுத் துறை இந்திய அணியின் பேட்டிங்கை எளிமையாக வைத்திருந்தது. அதே சமயத்தில் பந்துவீச்சு மேல் இருந்த நம்பிக்கையில் இந்திய பேட்ஸ்மேன்கள் தைரியமாக விளையாடினார்கள்.

ஆனால் இறுதிப் போட்டியில் இது எல்லாமே மாறிப்போனது. கில், ரோகித், ஸ்ரேயாஸ் என மூன்று விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழ இந்திய அணி திடீரென ஒரு நெருக்கடிக்குள் சிக்கி, இந்திய அணியின் அச்சமற்ற பேட்டிங் அணுகுமுறை மாறிப்போனது.

- Advertisement -

இதற்கடுத்து ராகுல் மற்றும் விராட் கோலி மிக பொறுமையாக ஆட்டத்தை தள்ளி சென்றார்கள். இந்த நிலையில் விராட் கோலி ஆட்டம் இழந்த நிலையில், சூரியகுமார் யாதவை களம் இறக்காமல் ஜடேஜாவை களம் இறக்கினார்கள். இதுவும் எந்த வகையிலும் இந்திய அணிக்கு பலன் அளிக்கவில்லை.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் கூறும் பொழுது “சூரிய குமார் யாதவுக்கு முன்னால் ஜடேஜாவை ஏன் அனுப்பினார்கள் என்று எனக்கு இப்பொழுது வரை புரியவில்லை. சூரியகுமார் ஏன் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்? அது சரியான ஒரு முடிவே கிடையாது.

ராகுல் விராட் கோலி உடன் இணைந்து கொஞ்சம் பொறுமையாக விளையாடுகிறார் என்றால், அடுத்து சூரியகுமாரை அனுப்பி அதிரடியாக அச்சம் இல்லாமல் விளையாட சொல்ல வேண்டும்.

சூரியகுமார் அவருடைய இயல்பான கிரிக்கெட்டை விளையாட வேண்டும். ஏனென்றால் பின்னாடி ஜடேஜா இருக்கிறார். உங்களுக்கு சூரியகுமார் யாதவ் பேட்டிங்கில் போராடுகிறார் என்றால், ஆறாவது இடத்தில் அவர் மீது நம்பிக்கை இல்லை என்றால், நீங்கள் அவருக்கு பதிலாக வேறு யாரையாவதுதான் தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும்!” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்!