“நேற்று கோலிக்கு தசைப்பிடிப்பு வந்தப்ப ஏன் உதவி செஞ்சிங்க?” – முன்னாள் ஆஸி வீரர் நியூசிலாந்துக்கு கண்டனம்!

0
2839
Virat

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதத்தை அடித்து, ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்திருந்த சச்சினின் சாதனையை முறியடித்தார்!

கிரிக்கெட் உலகில் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய சாதனை என்றால் நேற்று விராட் கோலி நிகழ்த்திய ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சாதனைதான்.

- Advertisement -

ஏனென்றால் அவர் இன்னும் விளையாடுவார். மேற்கொண்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் சதங்கள் அடிப்பார். டி20 கிரிக்கெட்டின் எழுச்சி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை குறைத்துக் கொண்டிருக்கிறது.

எனவே இப்படியான காரணங்களால் இனி இந்தச் சாதனையை இன்னொருவர் எட்டுவாரா? என்பது கேள்விக்குறி. இதனால் விராட் கோலி செய்திருக்கக் கூடிய சாதனை மிகப் பெரியதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த விராட் கோலிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர் கீழே விழுந்து பேட் அவரை விட்டு தூர சென்று விட்டது.

- Advertisement -

இந்த நேரத்தில் நியூசிலாந்து வீரர்கள் தசைப்பிடிப்பில் இருந்த விராட் கோலிக்கு உதவி செய்தார்கள். இதற்கு அடுத்து இந்திய மருத்துவக் குழு உள்ளே வந்தது. ஆஸ்திரேலிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஓடோனல்ட் நியூசிலாந்து வீரர்கள் மீது விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “விராட் கோலிக்கு வழி இருக்கும் பொழுது நீங்கள் எதற்காக உதவி செய்ய வேண்டும்? அவர்கள் உலகக் கோப்பை அரையிறுதியில் 400 ரன்களை நோக்கி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் உங்கள் நாட்டை தொடர விட்டு வெளியேற்றப் போகிறார். இந்த நிலையில் ஸ்பிரிட் ஆப் த கேம் எங்கு வருகிறது.

விராட் கோலி தசைப்பிடிப்பில் இருக்கும் பொழுது பேட்டை விட்டெறிகிறார். அதை ஒரு நியூசிலாந்து வீரர் போய் எடுத்து வந்து தருகிறார். நீங்கள் எங்களை இன்னும் பவுன்டரியும் சிக்ஸரும் அடியுங்கள் என்பது போல் இருக்கிறது.

அவர் நேற்று 50 சதங்கள் எடுத்திருக்கிறார். இப்படியான நிலையில் உலகக் கோப்பை அரை இறுதியில் உங்களுக்கு எதிராக அவர் சதம் அடிப்பதற்கு நீங்கள் ஏன் உதவி செய்ய வேண்டும். அவர் உடல் ரீதியாக சரியாக இல்லை என்றால் நாம் அவருக்கு உடல் ரீதியாக உதவ வேண்டியது!” இல்லை என்று கூறி இருக்கிறார்!