இன்று இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவது ஏன்?.. பிசிசிஐ விளக்கம்

0
996
ICT

குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் இந்திய இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் குடும்ப அவசர மருத்துவர் நிலை காரணமாக போட்டியில் இருந்து விலகி சென்று விட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி முக்கிய பந்துவீச்சாளரை இழந்து இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கி இருக்கிறது.

அஸ்வின் இல்லாத நிலையில் அந்த இடத்தில் இருந்து மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பான முறையில் செயல்பட்டு இந்திய அணியை ஆட்டத்தில் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்று இந்திய வீரர்கள் தங்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள். ஏதாவது கிரிக்கெட் சார்ந்த வீரர்கள் துக்க நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே இப்படி கிரிக்கெட் வீரர்கள் கையில் கருப்பு பட்டை கட்டி விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது ஏன் இப்படி கையில் கருப்பு பட்டை கட்டி இந்திய வீரர்கள் விளையாடுகிறார்கள் என இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறது.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட்டின் மிக மூத்த வீரராக வாழ்ந்து வந்த தத்தாஜி கெய்க்வாட் சமீபத்தில் 95 வயதில் தனது சொந்த ஊரான குஜராத் பரோடாவில் காலமானார்.

இவர் இந்திய அணிக்கு 1952 முதல் 1961 வரை மொத்தம் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில் நான்கு போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு இருக்கிறார்.

மேலும் 1947 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரையில் இந்திய முதல் தரப் போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருக்கிறார். மொத்தம் 110 இந்திய முதல் தரப் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

இதையும் படிங்க : வெறும் 83 ரன்.. அஷ்வின் இடத்தில் குல்தீப் அசத்தல்.. குக் பேச்சுக்கு இந்திய அணி பதிலடி

இந்திய கிரிக்கெட்டில் மிக அதிக வயதை கொண்டவராக இருந்த தத்தாஜி கெய்க்வாட் பிப்ரவரி 13 மறைந்த காரணத்தினால் இந்திய வீரர்கள் தங்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து தூக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்று பிசிசிஐ தெளிவுபடுத்தி இருக்கிறது.