முழு உடற்தகுதியுடன், கடினமான பேக்கிங் பயிற்சிகள் செய்து, ஒரு பேட்ஸ்மேனாக தன்னை தயார்படுத்திக் கொண்ட ஒரு வீரர், திடீரென்று நடுவில் கிரிக்கெட் வர்ணனையாளராகச் செல்வது எவ்வளவு பெரிய மனக் கஷ்டத்தை கொடுத்து இருக்கும் என்று யோசிக்க வேண்டும்.
தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியபோது, தினேஷ் கார்த்திக் இங்கிலாந்திற்கு ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராகச் சென்றார். ஆனால் அந்தப் பணியிலும் அவர் சிறப்பாக செயல்பட்டது வேறு கதை!
அதற்கு முந்தைய ஆண்டு வரை அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். ஆனால் கடந்த ஆண்டு கேப்டன் பதவி அவரிடமிருந்து பாதிக்கப்பட்டு இயான் மோர்கன் இடம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தன்னைச் சுற்றி நிகழும் ஏதோ ஒன்று இருக்கும் தினேஷ் கார்த்திக் பெரிதாய் கலங்கவில்லை.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பெங்களூர் அணிக்காக வாங்கப்பட்டு, அவருக்காகவே என்று ஃப்னிசர் ரோல் ஒதுக்கி தரப்பட்டது. இதில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் 183 ஸ்டிரைக் ரேட்டில் பினிஸிர் ரோலில் மிகப் பிரமாதமாக செயல்பட்டு இருந்தார். இதையடுத்து அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பே கடந்த ஆண்டு ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலில், அவர் தனது பினிஷிங் ரோல் பற்றி மிக விரிவாகப் பேசி இருந்தார். இப்பொழுது அதை மீண்டும் ஆகாஷ் சோப்ரா பகிர்ந்திருக்கிறார். இப்பொழுது அதை பார்க்கும் பொழுது தினேஷ் கார்த்திக் எந்த அளவிற்கு தொலைநோக்கோடு சிந்தித்து தியாக உணர்வோடு கடுமையாக உழைத்து பினிஷிங் ரோலில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்பது புரிகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது பற்றி தினேஷ் கார்த்திக் கூறும்பொழுது ” நான் நாட்டுக்காக விளையாட விரும்பும் ஒரு சாதாரண நபர். இதைத்தான் நான் உணர்ந்திருக்கிறேன். நான் எந்த அணிக்காக விளையாடினாலும் அந்த அணி வெற்றி பெற வேண்டும் என்று எப்பொழுதும் விரும்புவேன் அதற்காக கடுமையாக உழைப்பேன். நான் பெரும் முயற்சி செய்து நான் பேட்டிங் செய்வதற்கு எது சரியான இடம் என்று கண்டுபிடித்து இருக்கிறேன். நான் தமிழக அணிக்காக விளையாடும் பொழுதும் நம்பர் மூன்று இல்லை நான்கில் பேட்டிங் செய்யப் போவதில்லை. நம்பர் 5 அல்லது 6 ல் தான் பேட்டிங் செய்யப் போவேன். நான் இறங்கும் பேட்டிங் காலத்தில் என் பங்கை நான் செய்திருக்கிறேன். இப்படி நான் சொல்வதற்கு காரணம், இளம் வீரர்கள் கொஞ்சம் எளிதான அவர்களை சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் நான் கடினமான பினிஷிங் ரோலை எடுத்துக் கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்!
மேலும் இது தொடர்பாக பேசியுள்ள அவர் அதில் ” கொல்கத்தா அணியில் சுப்மன் கில் வளர்ந்துவரும் ஒரு வீரர். அவரைக் கீழே சென்று விளையாடும்படி கூறுவது நியாயமான ஒன்றாக இருக்காது. அதேபோல் நிதிஷ் ராணா நம்பர் மூன்றில் பேட்டிங் செய்யவே விரும்புகிறார். இலங்கை அணியுடனான தொடரில் அவர் கீழே சென்று விளையாடும் பொழுது மிகவும் சிரமப்பட்டு அதை நாம் பார்த்தோம். பேட்டிங் வரிசையில் கீழே விளையாடுவது ஒரு திறமை, அதற்காக நான் பயிற்சிகள் செய்து, என்னை தயார்படுத்திக் கொண்டு, வீரர்களை முன்னே ஆடவிட்டு நான் கடைசியில் ஆடுகிறேன். எனது பாத்திரம் பினிஷிங் ரோல்தான்” என்று விரிவாக விளக்கிப் பேசியிருக்கிறார்!






