டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் யார்? – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வித்தியாசமான விருப்பம்!

0
461
Sanjay manjrekar

வருகின்ற செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை போட்டி நடக்க இருக்கிறது. இதற்காக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கேப்டன் ரோகித் சர்மாவும் இதற்கான ஒரு முழுமையான அணியை கட்டமைக்க பல பரிசோதனை முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

இப்படியான இவர்களின் பரிசோதனை முயற்சிகள் வருகின்ற ஆகஸ்ட் மாதம் இருபத்தி ஏழாம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்ஸில் துவங்கும் ஆசியக் கோப்பை தொடரிலும் தொடர்கிறது. ஆசியக் கோப்பை தொடருக்கு காயத்தில் இருந்து மீண்ட கே எல் ராகுல், விராட் கோலி இருவரும் அணிக்கு திரும்பி வருகிறார்கள்.

- Advertisement -

இவர்கள் இருவரும் இல்லாதபொழுது இந்திய டி20 அணியில் முதல் மூன்று பேட்டிங் வரிசைக்கு ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் இருவரும் பரிசோதிக்கப்பட்டு இருந்தார்கள். தற்போது இவர்கள் அணிக்குள் வந்து இருக்கும் பொழுது, இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் யார் என்று கேள்வி எழுகிறது.

இந்தக் கேள்வியை இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போது தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக செயல்பட்டு வரும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இடம் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கான பதில் மிக கடினமானது என்று அவர் கூறியிருந்தார்.

மேற்கொண்டு இது தொடர்பாக பேசிய அவர் ” ஒரு ஆக்ரோஷமான பேட்டிங் யூனிட்டை கட்டி அமைப்பதற்கு கேஎல் ராகுலின் வருகை உதவி செய்யும். அதே சமயத்தில் விராட் கோலிக்கு இது ஒரு நெருக்கடியான தருணமாகும். நான் இதற்கு முன் இவர்கள் இல்லாதபொழுது இந்திய அணியின் டாப் 3 இல் ரிஷப் பண்ட் சூரியகுமார் ஆகியோரை பார்த்திருக்கிறோம். டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணியின் tab3 யார் என்று இப்பொழுது கூறுவது கடினமானது. இன்னும் 3 தொடர்கள் எஞ்சி இருக்கின்றன அதை அதை வைத்துத்தான் கூற முடியும்” என்று கூறினார்.

- Advertisement -

இவர் ரோகித் சர்மாவோடு ரிஷப் பண்ட் இங்கிலாந்து டி20 தொடரில் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டதை ஏற்கனவே பெரிதும் விரும்பி ஆதரித்து இருந்தார். தற்பொழுது இதைப் பற்றி கூறும் பொழுது ” ராத்திரியில் ரிஷப் பண்ட் வருவது மிகவும் உற்சாகமான ஒரு முடிவு. நான் அதை எப்பொழுதும் ஆதரிக்கிறேன். மீண்டும் அப்படி நடப்பதற்கான நிறைய வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது” என்று தெரிவித்தார்!

ஆசிய கோப்பை தொடர் டி20 வடிவத்தில் நடத்தப்படுகிறது. இதற்கடுத்து செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி உள்நாட்டில் தலா 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளோடு விளையாடுகிறது. இந்த 3 டி20 தொடர்களில் இந்திய வீரர்களின் செயல்பாட்டைப் பொறுத்து டி20 உலகக் கோப்பைக்கான அணி உருவாக்கப்படும் என்று தெரிகிறது!