விராட் கோலி, ஜடேஜா என இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டுவிட்ட நிலையில், கேப்டன் ரோஹித் ஷர்மா அவர்களுடன் புறப்படாத காரணம் இதுதான்

0
267

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி (கடந்த ஆண்டு விளையாடப்படாத கடைசி டெஸ்ட் போட்டி) ஜூலை 1 முதல் இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதன் பின்னர் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கின்றது. அதற்கென தற்பொழுது இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

விராட் கோலி புஜாரா ரவீந்திர ஜடேஜா சுப்மன் கில் தாகூர் போன்ற இந்திய வீரர்கள் இன்று இங்கிலாந்துக்கு புறப்பட்டுவிட்டனர். அங்கே சென்று அவர்கள் ஒரு சில நாட்களில் பயிற்சி ஆட்டம் எடுத்து தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா விமானத்தில் பயணிக்கவில்லை.

- Advertisement -

காயம் காரணமாகவே அவர் பயணிக்கவில்லை என்றும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாட போவதில்லை என்ற வதந்திகள் அடுத்தடுத்து வெளியானது. ஆனால் அவர் ஏன் புறப்படவில்லை என்கிற உண்மையான காரணம் தற்போது நமக்கு தெரியவந்துள்ளது.

ரோஹித் ஷர்மா பயணிக்காத காரணம் இதுதான்

மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா தலைமையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. பேட்டிங்கிலும் அவர் சற்று சுமாராகவே விளையாடினார் எனவே அவருக்கு நிச்சயமாக ஒரு ஓய்வு தேவை என்கிற அடிப்படையில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.தனது குடும்பத்துடன் நேரத்தை தற்போது அவர் செலவு செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது. மாலத்தீவுக்கு சென்று அங்கே தனது குடும்பத்துடன் அவர் தற்பொழுது ஓய்வு எடுத்து வருகிறார்.

- Advertisement -

இங்கிலாந்துக்குச் சென்று நேரடியாக விளையாடலாம் எந்தவித கட்டுப்பாடுகளும் ( தனிமைப் படுத்திக் கொள்ளுதல் போன்ற ) இல்லாததால் அவர் ஜூன் 20ஆம் தேதி அன்று இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது தெரியவந்துள்ளது.

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலாக டி20 தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கிலாந்துக்கு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டி20 தொடர் நடந்து முடிந்தவுடன் ஜூன் 20ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளனர்.நமக்கு கிடைத்த தகவலின்படி இவர்களுடன் இணைந்து கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இங்கிலாந்துக்கு விமானத்தில் பயணிக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.