“உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும்?” – பென் ஸ்டோக்சின் எதிர்பாராத தேர்வு!

0
40953

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு மிகவும் எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு வந்த அணி இங்கிலாந்து!

மேலும் அந்த அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் இரண்டு வடிவத்திலும் தற்பொழுது சாம்பியனாக இருந்து வருகிறது.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து அணி உடைய கிரிக்கெட் அணுகுமுறை எல்லா வகையிலும் தாக்குதல் பாணியிலேயே இருக்கிறது.

இதன் காரணமாகவே உலகெங்கும் இங்கிலாந்து கிரிக்கெட் என தனி ரசிகர் பட்டாளம் உருவாகி வந்தது. குறிப்பாக அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முறைக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

மேலும் இங்கிலாந்திடம் நிறைய ஆல்ரவுண்டர்கள் இருந்தார்கள். இதன் காரணமாக அவர்களுடைய பேட்டிங் வரிசையை பதினோராவது இடம் வரைக்கும் நீட்டிக்க முடிந்தது.

- Advertisement -

குறிப்பாக பேட்டிங் வரிசையில் முக்கிய இடங்களில் மேட்ச் வின்னிங் பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள். குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் போன்ற பெரிய தொடர்களுக்கான வீரர்கள் இருந்தார்கள்.

இதன் காரணமாக இங்கிலாந்து அணி மீதான எதிர்பார்ப்பு அவர்களை விட ரசிகர்களுக்கு மிக அதிகமாக இருந்தது. எதிரணியின் ரசிகர்களுக்கு இங்கிலாந்து குறித்து பயம் இருந்தது உண்மை.

இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் ஆறு ஆட்டங்களில் ஐந்து ஆட்டங்களைத் தோற்று, தற்பொழுது உலகக்கோப்பை அரை இறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறி இருக்கிறது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட பென் ஸ்டோக்ஸ் இடம் பத்திரிகையாளர் ஒருவர் ” நீங்கள் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியாவில் தற்பொழுது பல அணிகளுக்கு எதிராக விளையாடி விட்டீர்கள். இந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடியவர்களாக யார் இருப்பார்கள்? இந்தியா இருக்குமா இல்லை தென் ஆப்பிரிக்கா இருக்குமா? தென் ஆப்பிரிக்கா சமீபத்தில் பெரிய ரன் அடித்து வருகிறார்கள்!” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மிகச் சுருக்கமாக பதிலளித்த பென் ஸ்டோக்ஸ் கூறும்போது ” தென் ஆப்பிரிக்கா நன்றாக இருக்கிறது. ஆனால் நீங்கள் விரும்பிய பதில் இது இல்லை என்று நினைக்கிறேன்!” என்று நகைச்சுவையாகக் கூறியிருக்கிறார்!