சிஎஸ்கேவில் வெளியே தெரியாத பல வேலைகளை தோனி செய்கிறார்; சொல்லலாமா வேண்டாமா என தெரியவில்லை.. ஆனாலும் சொல்கிறேன் – மேத்தியூ ஹைடன் பேட்டி!

0
58379

சிஎஸ்கே அணிக்குள் கேப்டன் தோனி செய்யும் பல வேலைகள் தான் அணியை இவ்வளவு வெற்றிகரமாக வைத்திருக்கிறது. என்று தனது சமீபத்திய பேட்டி சிஎஸ்கே வீரர் மேத்தியு ஹைடன் கூறியுள்ளார்.

நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 12-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு வந்தது. பத்தாவது முறையாக பைனலுக்கு தேர்வாகியுள்ளது. இதில் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. இம்முறை இன்னும் ஒரு போட்டி வெற்றி பெற்றால் கோப்பையை வெல்லும் தருவாயிலும் இருக்கிறது.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி இவ்வளவு வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்கு காரணம் சிஎஸ்கே அணியில் நிலவி வரும் சூழல் மற்றும் உள்ளே இருக்கும் அதிகாரிகள் வீரர்களை நடத்தும் விதம், இவை அனைத்திற்கும் மேலாக மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் செயல்படும் விதம் என அனைத்தும் கூறப்பட்டுகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் வெளிவராத பல தகவல்கள் இருப்பதாகவும், தோனி மைதானத்தில் கேப்டன் பொறுப்பில் செயல்படுவதை தாண்டி மைதானத்திற்கு வெளியேவும் கேப்டன் பொறுப்பில் பல வேலைகளை செய்து வருகிறார்!அது அணி நிர்வாகத்திற்கும் இளம் வீரர்களுக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கும் பல வகைகளில் உதவுகிறது என்று கூறியுள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் மேத்தியூ ஹைடன்.

“தோனி ஒரு மந்திரவாதி. அவர் வேறொரு அணியில் பயன்படமாட்டார்கள் என்று வெளியேற்றப்பட்ட வீரர்களை எடுத்து, அவர்களைப் பொக்கிஷமாக ஆக்குகிறார். அவர் மிகவும் திறமையான மற்றும் நேர்மறையான கேப்டன். இதெல்லாம் அனைவருக்கும் தெரிந்தது.

- Advertisement -

ஆனால் வெளியே தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. நான் அவரிடம் பேசியபோது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றைச் சொன்னார். தோனி பேசிய விஷயம், அவரது பணிவு மற்றும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் சிஎஸ்கே அணியை அளவுகடந்து நேசிப்பது தெரிந்தது.”

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் இடையே இருக்கும் பந்தத்தை தோனி தனது செயல்பாட்டின் மூலம் வளர்க்கிறார் மற்றும் பலப்படுத்துகிறார். மேலும் சிஎஸ்கே அணியில் தெளிவான கட்டமைப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறார். இதை அவர் இந்திய அணியில் இருந்த போதும் செய்திருக்கிறார்.

இதனால் உள்ளே வரும் வீரர்கள் எளிதாக இந்த சூழ்நிலைகளை புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கேற்றவாறு கிடைக்கும் வாய்ப்புகளில் நன்றாக செயல்பட முடிகிறது. மேலும் மற்ற அணிகளில் செட் ஆக மாட்டார்கள் என்ற வீரர்களையும் எடுத்து சரியான இடத்தில் பயன்படுத்தி பலரும் பேசும் அளவிற்கு கொண்டு சென்றிருப்பது வேறு எந்த அணியிலும் பார்க்க முடியாது. இது வெறுமனே தோனி மைதானத்திற்குள் செய்யும் செயலல்ல. அதற்கு வெளியேவும் தன்னுடைய கேப்டன் பொறுப்பை வைத்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.” என்றார் ஹைடன்.