“இந்தப் பையன எந்த இடத்துல வேணாலும் இறக்கி விடலாம்; எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” – ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர் பாராட்டு!

0
1645
Ict

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு மிகப்பெரிய நன்மை ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணியில் சமீப காலத்தில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருந்து வருகிறது.

இடது கை பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கும் பொழுது இன்னொரு பக்கத்தில் வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடும் பொழுது, இருவருக்கும் ஒரே நேரத்தில் பந்துவீச்சாளர்கள் மாற்றி மாற்றி பந்து வீசுவது என்பது கடினமான ஒரு விஷயம்.

- Advertisement -

இப்படியான காரணத்தினாலும், இடது கை சுழற் பந்துவீச்சாளர்களையும் லெக் ஸ்பின்னர்களையும் எதிர்கொள்ளவும் இடது கை பேட்ஸ்மேன்கள் தேவை என்பதாலும், இடது கை பேட்ஸ்மேன்கள் ஒரு அணியில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். இப்படி இல்லாத பொழுது எதிரணி பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேன்கள் மீது நெருக்கடியை உண்டாக்குவது வெற்றியை பெரிய அளவில் பாதிக்கும்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் விதமாக, இடது கை பேட்ஸ்மேன்களான இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சாய் சுதர்சன் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ஒட்டுமொத்தமாகக் கிடைத்தார்கள்.

இதில் இப்பொழுது ஜெய்ஸ்வால் மற்றும் திலக்கு வர்மா இருவருக்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெய்ஸ்வால் டெஸ்ட் மற்றும் டி20 அணியிலும் திலக் வர்மா டி20 அணியிலும் இடம் பிடித்திருக்கிறார்.

- Advertisement -

இதில் திலக் வர்மா இந்த வருடம் ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் 343 ரன்களை 164 ஸ்ட்ரைக்ரேட்டில் அடித்திருக்கிறார். மேலும் இவர் துவக்க வீரராக ஆரம்பித்து எந்த இடத்தில் வேண்டுமானாலும் பேட்டிங் செய்யக் கூடியவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணிக்கு எப்படி எல்லாம் தேவைப்பட்டதோ அந்த இடத்தில் எல்லாம் வந்து இந்த வருடம் விளையாடினார்.

தற்பொழுது இவர் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹக் கூறும் பொழுது ” திலக் வர்மாவால் நான் பெரிதும் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். 2023 ஐபிஎல் தொடருக்கு முன்பாக நான் சிறிது காலம் மும்பை இந்தியன்ஸ் அணி உடன் இணைந்து இருந்தேன். திலக் வர்மா எதிரணி பந்துவீச்சாளர்களை ரீடிங் செய்வது மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர் சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறிக் கொள்ளக் கூடியவர் என்று நான் நினைக்கிறேன். அவர் பேட்டிங் யூனிட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வந்து விளையாட முடியும்.

கில் மற்றும் ஜெயஸ்வால் இருவரும் மிக அதிக அளவு ஸ்ட்ரைக்ரேட் கொண்டவர்கள். வேகபந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதை அவர்கள் விரும்புகிறார்கள். மேலும் பவர் பிளேவில் தைரியமாக ஆட்டத்தை எடுக்கிறார்கள். சஞ்சு சாம்சன் நம்பர் 3ல் ஆட்டத்தை நிலைநிறுத்தக் கூடியவராக இருக்கிறார் என்று நினைக்கிறேன். சூரியகுமார் யாதவை அசத்திய ஒரு பந்துவீச்சாளர் என்று யாருமே கிடையாது. அவருக்கு நான்காம் இடம் சரியாக இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!