மேட்ச்க்கு முன்னாடி நானும் எங்க அப்பாவும் பேசி நிறைய பிளான் பண்ணுவோம் – அர்ஜுன் டெண்டுல்கர் பேச்சு!

0
743
Arjun

இன்று ஐபிஎல் தொடரில் 25வது ஆட்டமாக மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்ட போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது வெற்றியை ஹைதராபாத் அணியை வீழ்த்தி மும்பை அணி பெற்றது!

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த அணிக்கு கேமரூன் கிரீன் மற்றும் திலக் வர்மா நல்ல பங்களிப்பை தர 20 ஓவர்கள் முடிவில் 192 ரன்களை ஐந்து விக்கெட் இழப்புக்கு மும்பை அணி எடுத்தது!

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு பெரிய அளவில் யாரும் பங்களிப்பு தராத போதும், கடைசி இரண்டு ஓவர்களுக்கு கைவசம் இரண்டு விக்கெட்டுகள் இருக்க 24 ரன்கள் தேவை என்கின்ற நிலைக்கு ஆட்டம் வந்திருந்தது. இந்த நேரத்தில் 19வது ஓவரை கேமரூன் கிரீன் வீச அந்த ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே ஹைதராபாத் அணியால் எடுக்க முடிந்தது.

கடைசி ஓவருக்கு 20 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த ஓவரை அர்ஜுன் டென்டுல்கர் வீசினார். வயது யார்க்கர்களாக அவர் பிரமாதமாக தொடர்ந்து வீச மேற்கொண்டு ரன் அவுட் மற்றும் கேட்ச் மூலம் இரண்டு விக்கட்டுகளையும் ஹைதராபாத் அணி இழந்து தோல்வியை தழுவியது. சிறப்பாக பந்து வீசிய அர்ஜுன் டெனடுல்கர் தனது ஐபிஎல் முதல் விக்கட்டை கைப்பற்றினார்.

வெற்றிக்குப் பின் பேசிய அர்ஜூன் டெண்டுல்கர் ” ஐபிஎல் முதல் விக்கட்டை பெற்றது மிகவும் சிறப்பாக இருக்கிறது. நான் என் கையில் இருப்பதைக் கொண்டு திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த நினைத்தேன். எங்களுடைய திட்டம் பந்தை வைடாக வீசி மைதானத்தின் நீளமான பக்கத்திற்கு பேட்ஸ்மேனை அடிக்கச் செய்வது ஆகும். நான் பந்து வீசுவதை விரும்புகிறேன். கேப்டன் ஆட்டத்தின் எந்தப் பகுதியில் பந்த வீச அழைத்தாலும் நான் அதை ஏற்று திட்டத்திற்கு தகுந்தார் போல் பந்த வீச விரும்புகிறேன்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“நானும் எனது தந்தையும் கிரிக்கெட் குறித்து நிறைய பேசுவோம். அதேபோல் ஆட்டத்திற்கு முன்பு என்ன மாதிரி உத்திகளை கையாளலாம் என்று விவாதிப்போம். மேலும் ஒவ்வொரு போட்டிக்கும் முன்பாக நான் எதில் பயிற்சி செய்ய வேண்டும் என்று அவர் எனக்கு கூறுவார். நான் பந்தை ரிலீஸ் செய்வதிலும், மற்றும் சரியான லைன் லென்தில் வீசுவதிலும் கவனம் செலுத்தினேன். பந்து ஸ்விங் ஆனால் போனஸ் இல்லையென்றால் பந்து அப்படியே போகட்டும் ஒன்றும் பிரச்சனை இல்லை!” என்று கூறியிருக்கிறார்!