கடந்த மாதத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்த டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி ஒரு மாதம் முடிவடைகிறது. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி இந்திய அணியினர் இந்தியா வந்து சேர்ந்த பொழுது விமானத்தில் நடந்த சுவாரசியமான விஷயங்கள் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.
இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று, இந்திய ரசிகர்களின் முன்னாள் அந்த வெற்றியை கொண்டாட மிகவும் உற்சாகமாக எதிர்பார்த்து இருந்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் எதிர்பார்த்தபடி உடனுக்குடனே இந்தியா வந்து சேர்ந்து கொண்டாட்டத்தை நடத்த முடியவில்லை.
உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி முடிந்ததும் பார்படாசில் ஒரு சூறாவளி ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு இரண்டு நாட்கள் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் இந்திய வீரர்கள் இரண்டு நாட்கள் ஹோட்டல் அறையில் முடங்க வேண்டியதாக இருந்தது.
இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தனி விமானத்தை ஏற்பாடு செய்ய, அதில் இந்திய வீரர்கள் மற்றும் ஊழியர்கள், மேலும் இந்திய பத்திரிகையாளர்கள் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு குழு என எல்லோரும் டெல்லி வந்து சேர்ந்தார்கள். அப்போது விமானத்தில் என்ன சுவாரசியமான விஷயங்கள் நடைபெற்றது? என்பது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்த விமானத்தில் பார்படாசில் இருந்து டெல்லி வந்து சேரும் வரையில் 16 மணி நேரமாக யாருமே தூங்கவில்லை. இதுதான் மிக அதிகபட்சமாக இருந்திருக்கும். எந்த நேரத்திலும் யாரும் அமைதியாக இருக்கவில்லை. எல்லோரும் விமானத்திற்குள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். மேலும் சில கிரிக்கெட் வீரர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதற்காக வந்தார்கள்.
மேலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இன்ஜினியர்களும் விமானத்தில் ஒரு பகுதியாக இருந்தார்கள். ஏனென்றால் அவர்களும் நாடு திரும்ப அந்த விமானத்தில் இடம் கொடுக்கப்பட்டு இருந்தது. எனவே அந்த இடத்திற்கு ராகுல் டிராவிட் திடீரென ஒரு நான்கு முறை வந்தார். ஏனென்றால் அங்கு நான்கு இருக்கைகள் காலியாக இருக்கிறதா? என்று அவர் பார்த்தார். அவருடைய பிசினஸ் கிளாஸில் இருந்து இங்கு வந்து கொஞ்ச நேரம் தூங்கினார்.
இதையும் படிங்க : 6 பயிற்சியாளர்கள்.. கம்பீருக்காக இங்கிலாந்து மாடலில் பிசிசிஐ திட்டம்.. இந்திய கிரிக்கெட்டில் புதிய மாற்றம்
விமானத்தில் நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ரோகித் யாரையோ திட்டுவது போல இருந்தது. நான் கண் விழித்து என்ன நடக்கிறது? என்று பார்த்த பொழுது, ரோகித் தன்னுடைய பாணியில் நகைச்சுவையாகத் திட்டிக் கொண்டிருந்தார். பின்பு எங்களுடைய இடத்திற்கு ரோகித் சர்மாவை தொடர்ந்து ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா எல்லோரும் வந்தார்கள். பத்திரிகையாளர்களுடன் நீண்ட உரையாடல்கள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது” என்று கூறியிருக்கிறார்.






