ஐபிஎல் தொடர் எப்பொழுது ஆரம்பிக்கிறது?.. தேதியை வெளியிட்ட பிசிசிஐ பொருளாளர்.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

0
237
Ipl2024

இந்தியாவில் தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் அதிகாரப்பூர்வமாக மார்ச் 11-ம் தேதி முடிவுக்கு வருகிறது. மார்ச் 7ஆம் தேதி துவங்கும் கடைசி டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் அங்கிருந்து இந்திய வீரர்கள் நேராக ஐபிஎல் அணிகளில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதே சமயத்தில் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதியில் முடிவடைவது வழக்கம். எனவே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடர் அட்டவணை அறிவிப்பை மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கின்ற காரணத்தினால், ஐபிஎல் 17வது சீசனின் அட்டவணையை வெளியிடுவதில் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அதே சமயத்தில் இந்தியாவிற்கு வெளியே ஐபிஎல் தொடர் நடத்தப்படாது என்று ஏற்கனவே உறுதி கொடுத்திருப்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இது குறித்து பெரிய அளவில் பயம் கொள்ள தேவையில்லை.

இந்த நிலையில் ஏற்கனவே பொதுத் தேர்தல் காரணமாக இரண்டாவது ஐபிஎல் தொடர் தென் ஆப்பிரிக்காவில் வைத்து நடத்தப்பட்டது. பின்பு கொரோனா பாதிப்பின் போது ஐக்கிய அரபு எம்ரேடில் வைத்து இரண்டு முறை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது பிசிசிஐ பொருளாளர் அருண் தோமல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிகரமான ஐபிஎல் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

- Advertisement -

17ஆவது ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் 22ஆம் தேதி துவங்கும் என்றும், மே 26 ஆம் தேதி முடிவடையும் என்றும் அவர் கூறியிருக்கிறார். மேலும் முதல் 15 நாட்களுக்கான அட்டவணையை மட்டுமே தற்சமயம் வெளியிட முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : 4வது டெஸ்ட்.. இந்திய அணியின் ஹீரோ ராஞ்சி வரவில்லை.. பெரிய பின்னடைவு

இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் தோமல் கூறும் பொழுது “தற்பொழுது பிசிசிஐ அரசாங்கத்துடன் ஐபிஎல் தொடர்பு குறித்த பேச்சு வார்த்தையில் இருக்கிறது. அதே சமயத்தில் தொடர் ஆரம்பிக்கும் மற்றும் முடியும் தேவைகளும், தொடர் நடைபெறும் முதல் இரண்டு வாரங்களுக்கான அட்டவணையையும் கொடுப்பது அவசியமாக இருக்கிறது. மார்ச் 22 ஆம் தேதி 17வது ஐபிஎல் சீசன் தொடங்கி மார்ச் 26ஆம் தேதி முடிவடையும். அதே சமயத்தில் முதல் பதினைந்து நாட்களுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணை முதலில் வெளியிடப்படும்” என்று கூறியிருக்கிறார்.