அஸ்வின் செலக்ட் ஆனதும்.. உடனே டூப்ளிகேட்டை கூப்பிட்ட ஆஸி.. அடுத்து நடந்த சிறப்பான சம்பவம்!

0
4034
Ashwin

13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணி செப்டம்பர் 28ஆம் தேதி இரவு இறுதியாக அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட இந்த அணியில் அக்சர் படேல் இடத்தில் வலது கை நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக் கோப்பை இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டார்!

- Advertisement -

பொதுவாக அஸ்வின் நட்சத்திர வீரர்களுக்கும், இடது கை பேட்ஸ்மேன்களுக்கும் பெரிய பிரச்சனையாக இருக்கக்கூடியவர். அவர் கணிக்க முடியாதவராக இருப்பதால் கிரிக்கெட்டை எதோ ஒரு வகையில் அழுத்தத்தில் கொடுத்து விடுகிறார்கள்.

தற்பொழுது ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய உலகக்கோப்பை அணிக்குள் வந்ததும், மற்ற அணிகள் இந்தியாவுடன் விளையாடும் பொழுது அவரை எதிர்கொள்வது எப்படி? என்று ஆயத்தமாக தயாராகி விட்டன. இதிலிருந்தே அவர் எவ்வளவு தாக்கம் தரக்கூடிய வீரர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில் இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் டெஸ்ட் தொடர் விளையாட ஆஸ்திரேலியா இங்கு வந்த பொழுது, அஸ்வினி சமாளிப்பதற்காக இந்தியாவின் உள்நாட்டு வீரர் பரோடாவை சேர்ந்த மகேஷ் பத்தியாவை பயிற்சிக்கு எடுத்து பயிற்சி செய்தார்கள். இவர் ரவிச்சந்திரன் அஸ்வின் போலவே பந்து வீசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் உலகக் கோப்பை இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளே வந்ததும் மகேஷ் பத்தியாவுக்கு ஆஸ்திரேலியா அணி நிர்வாகத்திடம் இருந்து பயிற்சிக்கு அழைப்பு வந்திருக்கிறது.

இதுகுறித்து மகேஷ் பத்தியா கூறும்பொழுது “அக்சருக்கு பதிலாக அஸ்வின் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன், எனக்கு ஆஸ்திரேலிய நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்தது. சர்வதேச அணிகளுடன் இணைந்து பணியாற்றுவது எப்பொழுதும் உற்சாகமான ஒன்று.

இருந்தாலும் கூட என்னுடைய முன்னுரிமை எனது மாநில அணியான பரோடாவுக்குதான். இந்த நீண்ட சீசனில் பரோடா அணிக்காக நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன், எனவே நான் தொடர்ந்து எனது அணிக்காக பயிற்சியில் ஈடுபட்டாக வேண்டும். எனவே நான் ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்தின் அழைப்பை மறுத்துவிட்டேன்!” என்று கூறியிருக்கிறார்!