“யுவராஜ் 2011ல் பண்ணினதை இந்த சிஎஸ்கே வீரர் 2023 உலக கோப்பையில் பண்ணுவார்” – கிருஷ் ஸ்ரீகாந்த் நம்பிக்கை!

0
3642
Srikanth

இந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடக்க இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை நேற்று மதியம் வெளியிடப்பட்டது.

இந்த முறை இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு மிக அதிக அளவில் இருக்கிறது.

- Advertisement -

இந்தியா கடைசியாக மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றி இருந்தது. அதற்குப் பிறகு எந்தவித வடிவத்திலும் உலகக்கோப்பையை கைப்பற்றவில்லை.

இந்தியா முதல் முதலில் 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றிய பொழுது ஆல் ரவுண்டர்களான மொகிந்தர் அமர்நாத் ரோஜர் பின்னி, மதன்லால் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தனர்.

அதேபோல 2011 ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றிய பொழுது யுவராஜ் சிங் மிக முக்கியமான ஆல் ரவுண்டராக இருந்தார்.

- Advertisement -

தற்பொழுது இதை குறிப்பிட்டு பேசியிருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ” இந்திய நிலைமைகளில் விக்கெட்டுகளில் பந்து திரும்பும். ஆஸ்திரேலியா போல பவுன்ஸ் ஆகாது. இங்கிலாந்து போல நகராது. இந்தியாவில் வைத்து விளையாடுவது இந்தியாவிற்கு ஒரு நன்மையான விஷயம். அதேபோல 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நிறைய ஆல் ரவுண்டர்கள் நமது அணியில் விளையாடியதை நாம் பார்த்தோம்.

எங்களிடம் ஒரு அற்புதமான அணி இருந்தது. மேலும் தோனியும் சிறப்பாக அணியை வழிநடத்தினார். அந்த நேரத்தில் எங்களிடம் யுவராஜ் சிங் இருந்தார். இந்த உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் செய்ததை ரவீந்திர ஜடேஜா செய்வார் என்று நான் நம்புகிறேன்.

இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்றால் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் மிக முக்கியமான பங்களிப்பை அணிக்குத் தர வேண்டும்.

நான் பாகிஸ்தான் அணியை நிராகரிக்கவில்லை. அவர்கள் துணைக் கண்ட நிலைமைகளுக்கு நன்கு பழகியவர்கள். ஆனால் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் அவர்கள் இந்தியாவிற்கு வந்து அதிக ஆண்டுகள் ஆகிவிட்டது!” என்று கூறியிருக்கிறார்!