CT 2025: பைனலில் இந்தியா நியூஸிலாந்து.. ஒருவேளை போட்டி ரத்தானல் யாருக்கு கோப்பை.?. மழைக்கு வாய்ப்பு இருக்கா.?. முழு விபரம்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி உள்ளது. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாட இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்த இரு அணிகள் மோதிய 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது. இதனால் அந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க தரமான வாய்ப்பு கிடைத்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இருந்தாலும் நியூசிலாந்து அணியிடம் கூடுதல் எச்சரிக்கையுடன் இந்தியா விளையாட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.

மழை பெய்தால் என்ன நடக்கும்?

இந்த சூழலில் மார்ச் 9ஆம் தேதி ஒருவேளை மழை பெய்தால், ஐசிசி விதிகளின்படி என்ன நடக்கும் என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஐசிசி விதிகளின் படி மார்ச் 9ஆம் தேதியன்று மழை பெய்தால், ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குறைந்தபட்சம் 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்த முயற்சிக்கப்படும்.

ஒருவேளை அப்போதும் போட்டியை நடத்த முடியவில்லை என்றால், ஆட்டம் மார்ச் 10ம் தேதியான ரிசர்வ் நாளிற்கு மாற்றப்படும். ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான 2019 அரையிறுதி மற்றும் 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ரிசர்வ் நாளன்று நடைபெற்று இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

சூப்பர் ஓவர் முடிவு

ஒருவேளை ஆட்டம் டை-யில் முடிவடைந்தால், சூப்பர் ஓவர் மூலமாக வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். மீண்டும் சூப்பர் ஓவர் டை-யில் முடிவடைந்தால், மீண்டும் சூப்பர் ஓவர் நடத்தப்படும். பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியாளர் முடிவு செய்யப்பட மாட்டார். ஒருவேளை ரிசர்வ் நாளன்றும் மழை பெய்து ஆட்டம் நடக்கவில்லை என்றால், கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

ஆனால் துபாய் மண்ணில் மார்ச் 9ம் தேதியன்று மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டபடி இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் எந்த தடையும் இருக்காது என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -
Published by

Recent Posts