“99ல எங்களுக்கு நடந்தது.. இந்திய கிரிக்கெட் இப்பவுமே..!” – வாசிம் அக்ரம் பரபரப்பான பேச்சு!

0
2068
Akram

நடைபெற்று முடிந்திருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்வி யாரும் பெரிய அளவில் எதிர்பார்க்காத ஒன்றாகவே அமைந்திருக்கிறது.

இந்த தொடர்பு முழுக்க இந்திய அணி மிகச் சிறப்பான முறையில் விளையாடி வந்தது. வாய்ப்பு பெற்ற எல்லா வீரர்களும் அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் விளையாடினார்கள்.

- Advertisement -

எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு குழு அசாத்தியமான திறமையைக் கொண்டிருந்தது. அவர்கள் விக்கெட் வீழ்த்தும் வேகம் நம்ப முடியாத அளவில் இருந்தது.

இந்திய அணிக்கு இறுதிப்போட்டியில் நெருக்கடிகள் வரலாம் ஆனால் எப்படியும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி விடும் என்று நம்பினார்கள். இந்த எதிர்பார்ப்புகள் அப்படியே தற்பொழுது உடைந்து போய் இருக்கிறது.

இறுதிப் போட்டியில் தோற்று இருந்தாலும் இந்தியா ஒரு அணியாக விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. இந்தியாவின் கிரிக்கெட் திறமைகள் ஆச்சரியப்படும் அளவுக்கு தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள வாசிம் அக்ரம் கூறும் பொழுது “ஆமாம் இந்தியா இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இப்படியானவை கிரிக்கெட்டில் நடக்க செய்கின்றன. இந்தியாவுக்கு ஒரு மோசமான நாள் இருந்தது. அது இறுதி போட்டியில் வந்தது.

அவர்களின் கிரிக்கெட் அமைப்பு வீரர்களுக்கான பணம், நன்கு சிந்திக்கப்பட்ட திட்டங்கள், திறமையானவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தருவது என இந்த விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்தியாவின் கிரிக்கெட் மிகவும் நல்ல இடத்தில் இருக்கிறது.

1999 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நான் கேப்டனாக இருந்தேன். ஆஸ்திரேலியாவை நாங்கள் லீக் சுற்றில் தோற்கடித்து இருந்தோம். அவர்களை இறுதிப்போட்டியில் சந்தித்த பொழுது அவர்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தார்கள்!” என்று கூறியிருக்கிறார்!