“ஸ்மித்துக்கும் டி20க்கும் என்ன சம்பந்தம்?.. அவரால் எதுவும் பண்ண முடியாது!” – இந்திய முன்னாள் வீரர் ஓபன் ஸ்பீச்!

0
800
Smith

நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் தோற்ற ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரராக அந்த அணியின் ஒருநாள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ஸ்மித் வந்தார். இது எல்லோருக்கும் ஆச்சரியம் அளிக்கக் கூடிய ஒன்றாக இருந்தது.

- Advertisement -

அவருடைய டி20 பேட்டிங் அணுகுமுறை சரியில்லாத காரணத்தினால்தான் ஐபிஎல் தொடரில் அவரை எந்த அணிகளும் வாங்க முன் வரவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியான இப்படி ஒரு முடிவுக்கு வந்தது.

குறிப்பாக அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 கிரிக்கெட் நடைபெற இருக்கிறது. இங்கு மெதுவான ஆடுகளங்கள் இருப்பதால் பேட்டிங் செய்வது கடினம். எனவே அங்கு நிலையாக நிலைத்து நின்றும் விளையாடும் வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இதன் காரணமாகவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது.

இது குறித்து விமர்சனம் செய்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஸ்மித் பற்றி என்னுடைய மனதில் டி20 கிரிக்கெட் குறித்து 50 க்கு 50 சதவீதம் தான் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. அவர் நீண்ட நேரம் பந்துக்கு பந்து விளையாடினார்.

- Advertisement -

அவர் நன்றாக தொடங்கிய போதிலும் கூட பந்துக்குப் பந்து விளையாடும் நிலைக்கு சென்றார். அவர் ஆஸ்திரேலியாவுக்கான நீண்ட கால டி20 கிரிக்கெட் வீரர் என்று நான் முடிவு செய்யப் போவது கிடையாது.

அவர் பொதுவாக ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அதற்கான வழிமுறைகளை அவர் கண்டுபிடித்து இருக்கிறார். அவர்கள் தங்கள் விளையாட்டை மேம்படுத்த புதிய வழிகளை வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் விசாகப்பட்டினத்தில் பார்த்த முதல் போட்டியில் அவருக்கு பேட்டிகள் இன்னும் வேகம் தேவைப்படுகிறது என்பது தெளிவாகிறது. அவர் ஒரு சிறந்த வீரர். ஆனால் அவர் டி20 கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய நான் பார்த்ததில்லை!” என்று கூறியிருக்கிறார்!