தோனி என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டா போதும் எல்லாம் சரியா நடக்கும் – ஆட்டநாயகன் ரகானே!

0
4696
Dhoni

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது!

இந்தப் போட்டியில் முதலில் டாசை வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்த கொல்கத்தா அணி, முடிவெடுத்த படி சரியான அளவுக்கு பந்து வீசவில்லை. அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் அசுரத்தனமாக இருந்தது.

- Advertisement -

குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரரான ரகானாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. 23 பந்துகளை சந்தித்து அரை சதம் அடித்த அவர், இறுதியாக ஆட்டம் இழக்காமல் 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்து மிரட்டினார். இந்தத் தொடர் முழுக்கவே அவரது பேட்டிங் மிகச் சிறப்பாகவும் அதிரடியாகவும் இருந்து வருகிறது.

தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணியால் இலக்கை வெற்றிகரமாக எட்டிப் பிடிக்க முடியவில்லை. எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து ஆட்டநாயகன் விருதை வென்ற ரகானே பேசுகையில் ” இந்த ஆட்டத்திற்கு தெளிவான மனநிலையை விட எதுவும் காரணம் கிடையாது. தெளிவான மனநிலை இருந்தால் நம்மால் எதையும் செய்ய முடியும். இந்த ஐபிஎல் சீசனுக்கு முன்பான எனது தயாரிப்புகள் மிகச் சிறப்பாக இருந்தது. ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நின்று மற்றும் ஒட்டி வந்தது. ஆனால் அவுட் ஃபீல்டு வேகமாகவும் மைதானத்தின் ஒருபுறம் பவுண்டரி எல்லை சிறியதாகவும் இருந்தது!” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
“நான் பாசிட்டிவாக இருக்க விரும்பினேன். இந்த தொடரில் நான் விளையாடிய எல்லா ஆட்டங்களையும் ரசிக்கிறேன். அதே சமயத்தில் என்னுடைய பெஸ்ட் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன். மகி பாய் கீழ் விளையாடுவது நல்ல கற்றுக் கொள்ள உதவும். இந்திய அணிக்காக அவரது தலைமையின் கீழ் வெகு நாட்களுக்கு முன்பு விளையாடி இருக்கிறேன். தற்பொழுது அவரது தலைமையின் கீழ் சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறேன். அவர் சொல்வதை கேட்டால் மட்டும் போதும். நம்முடைய செயல்பாடு சிறப்பாகத்தான் இருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!