நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 383 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய குயிண்டன் டி காக் 174 ரன்கள் அதிரடியாக குவித்தார்.
இதற்கு அடுத்து விளையாடிய பங்களாதேஷ் அணி 233 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து 149 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
நடப்பு உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐந்தாவது போட்டியில் இது நான்காவது வெற்றியாகும். இதன் மூலம் 8 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
வெற்றிக்குப் பின் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறும்பொழுது ” போட்டியில் இறுதிவரை செல்வது கடினமாக இருந்தது ஆனாலும் கூட நாங்கள் 10 விக்கட்டுகளை எடுக்க வேண்டி இருந்தது. எங்கள் குழுவிற்கு மேலும் ஒரு சிறந்த நாள் அமைந்திருக்கிறது.
சில நேரங்களில் நாம் இறுதிக்கட்ட ஓவருக்கு செல்வதால் இல்லையா என்பதை தீர்மானிக்க இரண்டு மாதிரியான மனநிலைகள் உள்ளது. இன்று எங்கள் பந்துவீச்சாளர்கள் திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டார்கள்.
மகமதுல்லா உள்ளே வந்து விளையாட நாங்கள் இறுதி கட்ட ஓவர்களுக்குள் செல்ல வேண்டியதாக போய்விட்டது. இன்று எங்களுடைய ஒட்டுமொத்த செயல்பாட்டில் நல்ல அறிகுறிகள் தென்பட்டது.
பேட்டிங்கில் குயிண்டன் மற்றும் கிளாசன் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் இருவரும் அடித்து நொறுக்கினார்கள். எல்லோரும் இதை வித்தியாசமாக அணுகுகிறார்கள் ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. நாங்கள் இதேபோல் விளையாட தொடர்ந்து முயற்சி செய்வோம்.
ரன் சேஸ் செய்வது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் கிடையாது. நாங்கள் இது குறித்து முன்பே கலந்து பேசி இருக்கிறோம். அது அந்தந்த வழியில் செல்கிறது அவ்வளவுதான். எங்களுக்கு இலக்கை துரத்துவது பற்றி சரியான ப்ளூ பிரிண்ட் கிடைக்கும் பொழுது நாங்கள் இன்னும் நன்றாக இருப்போம் என்று நினைக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!






