உலக கிரிக்கெட்

1 பந்து 3 ரன்.. 8 ஆண்டுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ்க்கு வெளிச்சம்.. பாகிஸ்தான் அணிக்கு நடந்த பரிதாபம்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசிப் பந்தில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது.

- Advertisement -

தற்போது அமெரிக்காவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இருந்தது.

சுருண்ட பாகிஸ்தான்

இந்த போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு டாப் ஆர்டரில் பகார் ஜமான் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 19 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். மேலும் அந்த அணி 53 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதைத்தொடர்ந்து கேப்டன் சல்மான் அலி ஆகா 33 பந்துகளில் 38 ரன்கள், ஹசன் நவாஸ் 23 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு அணியை மீட்டார்கள். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜேசன் ஹோல்டர் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

கலக்கிய ஜேசன் ஹோல்டர்

இதைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அனைத்து தொடர்ந்து விக்கெட் விழுந்தபடி இருந்தது. கேப்டன் ஷாய் ஹோப் 30 பந்தில் 21 ரன்கள், குடகேஷ் மோட்டி 20 பதில் 28 ரன்கள் எடுத்தார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 19.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. கடைசிப் பந்தில் வெற்றிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டன.

இதையும் படிங்க : ரோஹித் பாய் சொன்ன அந்த விஷயம்தான்.. நான் சதம் அடிக்க மற்றொரு காரணம் – தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் பேட்டி

இந்த நிலையில் பேட்டிங் முனையில் இருந்த ஜேசன் ஹோல்டர் கடைசிப் பந்தில் அபாரமாக பௌண்டரி அடித்து பாகிஸ்தான் அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்ல வைத்தார். மேலும் இவரே ஆட்டநாயகன் விருதையும் வென்றார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எட்டு வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by