வங்கதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தலா ஒரு வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது.
இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரூதர் போர்டு சதம் அடித்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் தன்ஸிட் ஹாசன் 60 ரன்கள், மெஹதி ஹாசன் 74 ரன்கள், முகமதுல்லா 50 ரன்கள் ஜேக்கர் அலி 48 ரன்கள் குவித்தனர். இதனால் வங்கதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்சாரி ஜோசப் இரண்டு விக்கெட்டுகள், சீல்ஸ் ஒரு விக்கெட், ரொமாரியா செப்பேர்டு மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. தொடக்க இரண்டு விக்கெட்டுகள் விரைவாக வெளியேறினாலும் அதற்குப்பின் கேர்ட்டி மற்றும் கேப்டன் சாய்ஹோப் ஆகியோர் ஓரளவு நிலைத்து நின்று விளையாடினர். இதில் கேர்ட்டி 21 ரன்கள் அடித்து வெளியேற அதற்குப் பிறகு கேப்டன் சாய் ஹோப் மற்றும் ரூதர் போர்ட் ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
குறிப்பாக ரூதர் போர்டு வங்கதேச அணியின் பந்துவீச்சை அடித்து துவைத்தார். 80 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட நிலையில் ஏழு பவுண்டரி மற்றும் எட்டு சிக்சர் என 113 ரன்கள் குவித்து 141.25 ஸ்ட்ரைக் ரேட்டில் சிறப்பாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதில் குறிப்பாக 47வது ஓவரை சௌமியா சர்க்கார் வீச அந்த ஓவரில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் சாய்ஹோப் 88 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் என 86 ரன்கள் குவித்து வெளியேற கிரீவ்ஸ் 31 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 41 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதையும் படிங்க:சிராஜுக்கு இதை செஞ்சிட்டிங்க.. அடுத்த போட்டியில் 2 மடங்கா திருப்பித் தருவார்.. ஆஸி பிளேயர்ஸ்க்கு சுனில் கவாஸ்கர் எச்சரிக்கை
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் முதல் ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.