Uncategorized

மார்க் வுட் எனக்கு மனைவி குழந்தை இருக்காங்க.. கொஞ்சம் மெதுவா போடுப்பா – சதம் அடித்த கெவிம் ஹாட்ஜ் பேட்டி

தற்போது இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெவிம் ஹாட்ஜ் சதம் அடித்து அணியை காப்பாற்றி இருக்கிறார். இந்த போட்டியில் அதிவேக இங்கிலாந்து பந்துவீச்சாளர் மார்க் வுட் இடம் களத்தில் நடந்த சுவாரசிய சம்பவம் பற்றி கூறியிருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு துணை கேப்டன் ஒல்லி போப் 121 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய இங்கிலாந்து 84 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில் ஜோடி சேர்ந்த அலிக் ஆதனஸ் மற்றும் கெவிம் ஹாட்ஜ் 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இதில் கெவிம் ஹாட்ஜ் சிறப்பாக விளையாடி சதமடித்து 120 ரன்கள் எடுத்தார்.

இந்தப் போட்டியில் பந்து வீசிய இங்கிலாந்து வேகப்பந்து வீ ச்சாளர் மார்க் வுட் தான் வீசிய முதல் ஓவரில் சராசரியாக மணிக்கு 92 மைல் வேகத்தில் 6 பந்துகளையும் வீசினார். இதற்கடுத்து மூன்றாவது ஓவரில் சராசரியாக மணிக்கு 93 மைல் வேகத்தில் 6 பந்துகளையும் வீசினார். அதிகபட்சமாக மணிக்கு 157 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் திகைத்துப் போனார்கள்.

நேற்றைய போட்டி முடிந்ததும் இது குறித்து பேசிய கெவிம் ஹாட்ஜ் “மார்க் வுட் பந்துவீச்சு மிருகத்தனமானது. 90 மைல் வேகத்தில் ஒவ்வொரு பந்தையும் நாம் தினமும் எதிர்கொள்ள போவதில்லை. அவர் ஒவ்வொரு பந்தையும் அவ்வளவு வேகமாக பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது நான் அவரிடம் நகைச்சுவையாக எனக்கு ஒரு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கிறது என்று கூறினேன். ஆனால் அந்தப் போட்டி நன்றாக இருந்தது.

- Advertisement -

இந்தச் சதம் மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் மிகவும் கடினமானது என்று எங்களுக்கு தெரியும். இது சவால் ஆனது மேலும் மனதளவில் சோர்வடைய வைக்கக் கூடியது. மார்க் வுட் போன்றவர்களை எதிர்கொள்வது சவாலானது. ஆனால் அதை எதிர்த்து சிறப்பாக விளையாடிய முடிப்பது திருப்தியை கொடுக்கிறது.

இதையும் படிங்க : 206 ரன்.. ஹெட் மின்னல் பேட்டிங்.. டிஎஸ்கே அணியை மடக்கிய சிஎஸ்கே ரவீந்தரா.. வாஷிங்டன் அணி அபார வெற்றி

சதம் அடித்த உணர்வு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அப்பொழுது 97 ரன்களில் இருந்தேன் என்று நினைக்கிறேன். அப்போது எனக்கு வீசப்பட்ட பந்து ஒரு இன் ஸ்விங்கராக வந்தது. அந்தப் பந்தை அடித்தபோது என்ன நடந்தது என்று புரியவில்லை. பிறகு நானே என்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். அது அற்புதமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by