வெஸ்ட் இண்டீஸ் எங்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்திருக்கு.. ஏமாற்றமா இருக்கு – ராகுல் டிராவிட் வெளிப்படையான பேச்சு

0
1018
Dravid

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு மூன்று வடிவிலான கிரிக்கட் தொடர்களிலும் விளையாட சுற்றுப்பயணம் செய்திருந்தது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றி இருந்த இந்திய அணி, டி20 தொடரை இழந்திருக்கிறது!

இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் முகேஷ் குமார் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். ஒருநாள் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நகர்ந்து கொள்ள அணி பரிசோதிக்கப்பட்டது. இந்தத் தொடரில் முகேஷ் குமார் அறிமுகப்படுத்தப்பட்டார்.

- Advertisement -

இதற்கு அடுத்து நடந்த கடைசி தொடரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் மூவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். முதல் இரண்டு போட்டிகளை தோற்று அடுத்து இரண்டு போட்டிகளை வென்று தொடருக்குள் திரும்பி வந்த இந்திய அணி இறுதி மற்றும் ஐந்தாவது போட்டியில் தோற்று தொடரை இழந்தது.

கடைசியாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு ஒரு தொடரை இழந்திருந்தது. அதற்குப் பிறகு தற்பொழுது 2023 ஆம் ஆண்டு 17 வருடங்களுக்குப் பிறகு தொடரை இழந்திருக்கிறது. இந்த தோல்வி தற்பொழுது இந்திய ரசிகர்களிடையே விமர்சனத்தை உருவாக்கி வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும் பொழுது ” நாங்கள் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களை தோற்று பின்தங்கி இருந்தோம். ஆனால் மீண்டும் இரண்டு ஆட்டங்களை வென்று தொடருக்குள் வந்தோம். வழியில் சில தவறுகளை செய்தோம். ஐந்து ஆட்டங்களையும் எடுத்துக் கொண்டால் நாங்கள் செய்த சில தவறுகள் இருக்கிறது. முதல் இரண்டு ஆட்டங்கள் மற்றும் கடைசி ஆட்டத்தில் கூட எங்களால் சரியாகக் கடைசி வரை பேட் செய்ய முடியவில்லை. ஆனால் இது நடக்கலாம். இது இளம் வீரர்களைக் கொண்ட வளரும் அணி. நாங்கள் வளர்வதற்கான நேரங்களில், ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

அதே சமயத்தில் நிச்சயமாக நாங்கள் இந்தத் தோல்வியில் ஏமாற்றம் அடைகிறோம். நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆரம்பத்தில் இருந்து மீண்டு வந்த விதத்தில் சிறப்பாக முடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். வெஸ்ட் இண்டீஸ் ஒரு நல்ல டி20 அணி. அவர்கள் தங்கள் சொந்த சூழ்நிலையில் விளையாடினார்கள். சிறப்பாக விளையாடினார்கள். எங்களுக்கு அவர்கள் நிறைய கற்றுக் கொடுத்தார்கள்.

வெளிப்படையாக டெஸ்ட் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மழையால் ஒரு போட்டி ட்ராவில் முடிந்து சில புள்ளிகளை இழந்தது வருத்தமாக இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் நன்றாக இருந்தன. ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பை வரவிருக்கும் நிலையில் நாங்கள் சில விஷயங்களை செய்து பார்க்க நினைத்தோம். ஒருநாள் தொடரில் இருந்து நாங்கள் நல்ல பாடங்களை கற்றுக் கொண்டோம். எங்களுக்கு அதில் விரும்பிய முடிவு கிடைத்தது!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -