உலக கிரிக்கெட்

எங்களை குறி வச்சு நடுவர் ஏமாத்தறாரு.. நீங்க உடனே விசாரிக்கணும் – வெஸ்ட் இண்டீஸ் கோச் டேரன் சமி புகார்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்றாவது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் மீது வெஸ்ட் இண்டீஸ் தலைமை பயிற்சியாளர் டேரன் சமி மேட்ச் ரெப்ரி ஜவஹல் ஸ்ரீநாத் இடம் புகார் அளித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா அணி சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தவறான முடிவுகள்

இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ்க்கு எல்பிடபிள்யு கொடுக்கப்பட்டது. இதற்குப் பிறகு மேல் முறையீட்டில் பந்து பேட்டில் பட்டது தெரிந்தது. ஆனால் சர்ச்சைக்குரிய மூன்றாவது நடுவர் அதற்கு அவுட் கொடுத்தார். இது வெஸ்ட் இண்டீஸ் முகாமையும் அணியையும் வெகுவாக பாதித்தது.

இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷாய் ஹோப்புக்கு அலெக்ஸ் கேரி பிடித்த பந்து தரையில் மோதுவது தெரிந்தது. இருந்த போதிலும் மூன்றாவது நடுவர் அதைப் பற்றி எதையும் பார்க்காமல் அல்லது தொலைக்காட்சியில் பேசாமல் உடனே அவுட் கொடுத்தார். தற்போது இந்த விவகாரங்கள் பெரிய அளவுக்கு சர்ச்சையாக மாறிவிட்டன.

- Advertisement -

எங்களுக்கு நிலைத்தன்மை வேண்டும்

இதுகுறித்து மேட்ச் ரெஃப்ரி ஜவகர் ஸ்ரீநாத் இடம் புகார் அளித்த டேரன் சமி பேசும்பொழுது “என்ன செயல்முறை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். எதுவாக இருந்தாலும் முடிவுகளில் நிலைத்தன்மையை மட்டுமே நாங்கள் கேட்கிறோம். ஏதாவது ஒரு விஷயத்தில் முடிவு எடுக்கும்போது சந்தேகம் இருந்தால் நிலைத்தன்மையாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்”

இதையும் படிங்க : என் குழந்தையை விட நாடு பெருசு.. கேஎல் ராகுல் செஞ்ச அது மறக்கவே முடியாது – பதானி பாராட்டு

“நான் இந்த நடுவருடன் பிரச்சனையை ஏற்கனவே சந்தித்திருக்கிறேன். இங்கிலாந்து அணிக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடரில் இருந்தே இவருடன் ஆன பிரச்சனை ஆரம்பித்து விட்டது. இது மிகவும் வெறுப்பாக இருக்கிறது. நான் கேட்பதெல்லாம் முடிவு எடுப்பதில் நிலைத்தன்மை மட்டுமே” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by