இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து அந்த அணியின் கேப்டன் பேசி இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 121 மற்றும் 136 ரன்கள் என இரண்டு இன்னிங்ஸ்களிலும் வெஸ்ட் இண்டீஸ் எடுத்துச் சுருண்டது. மேலும் அந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இன்று இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் துவங்குகிறது. இந்தப் போட்டியை வென்றால் தொடரை சமன் செய்யலாம் என்கின்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் இருக்கிறது. அதே சமயத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்புகள் இங்கிலாந்து அணிக்கு முடிந்துவிட்டது. அவர்கள் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் விளையாட விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரேக் பிராத்வெயிட் பேசும்பொழுது “வெளிப்படையாக நாங்கள் ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். நாங்கள் ஒரு அணியாக செய்ய வேண்டிய பல விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடத்தி இருக்கிறோம். எங்களிடம் பேட்டிங்கில் கடந்த போட்டியில் கூட சில நேர்மறைகள் இருந்தது. பந்துவீச்சில் இங்கிலாந்தின் பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியது நேர்மறையானதுதான்.
பொதுவாக நீண்ட நேரம் பேட்டிங் செய்வது மிகவும் முக்கியமானது. நீங்கள் நீண்ட நேரம் பேட்டிங் செய்யும்பொழுது விஷயங்கள் எளிதானதாக மாறும். மோசமான பந்துகளை அடித்து விளையாட விரும்புவீர்கள் எல்லோரும் அதைத்தான் செய்வார்கள். ஆனால் நீங்கள் முதல் நாற்பது நிமிடம் பேட்டிங்கில் கொடுக்கும் உழைப்பு, அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு உதவி செய்யக்கூடும்.
இதேபோல் நான் மோசமான பந்துகளை வீசுவது மூலம் அது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். எனவே நாம் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். முதல் டெஸ்டில் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்து, நாம் அடுத்து நம்மை நம்பி விஷயங்களை செய்ய வேண்டும். ஆனால் அதை நீண்ட நேரத்திற்கு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இதையும் படிங்க : 3 விக்கெட் 21 ரன்.. லாரென் பெல் அசத்தல்.. நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து பெண்கள் அணி.. டி20I தொடரை வென்றது
நான் பேட்டிங்கில் அடித்தளத்தை உருவாக்க உழைக்க வேண்டும். நான் இதைச் செய்தால் அணி பெரிய ரன்களுக்கு செல்ல முடியும். போனது எல்லாமே போய்விட்டது. அடைந்த தோல்வி மற்றும் தயாரிப்பு என எல்லாம் சென்று விட்டது. தற்போது வீரர்கள் நல்ல மனநிலையில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மனதளவில் நம்பிக்கையாக இருப்பதுதான் முக்கியம். எங்கள் சென்று விளையாட தயாராக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






