10 ஓவரில் வெ.இ ருத்ர தாண்டவம்.. ஷாய் ஹோப் காட்டடி.. பூரன் உலக சாதனை.. அமெரிக்கா வெளியேறியது

0
513
Hope

நடப்பு டி20 உலக கோப்பை தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் முக்கியமான போட்டியில் இன்று அமெரிக்க அணியை பார்படாஸ் மைதானத்தில் சந்தித்தது. பெரிய ரன் ரேட்டில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், பத்து ஓவர்களில் போட்டியை முடித்து, அரையிறுதிக்கான வாய்ப்பையும் தக்க வைத்திருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூயார்க் போல பந்துவீச்சுக்கு பெரிய சாதகம் இல்லாத பார்படாஸ் மைதானத்தில் அமெரிக்க பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் அதிரடியாக விளையாட முடியவில்லை.

- Advertisement -

அமெரிக்க அணிக்கு அதிகபட்சமாக ஆண்ட்ரீஸ் கவுஸ் 16 பந்தில் 29 ரன், நிதீஷ் குமார் 19 பந்தில் 20 ரன், மிலிந்த் குமார் 21 பந்தில் 19 ரன் எடுத்தார்கள். அமெரிக்க அணி 19.5 ஓவரில் 128 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஆண்ட்ரே ரசல் மற்றும் ரோஸ்டன் சேஸ் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங் காயத்தால் தொடரை விட்டு வெளியேறி விட்ட காரணத்தினால் ஷாய் ஹோப் துவக்க வீரராக அனுப்பப்பட்டார். கிடைத்த இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட அவர் அதிரடியில் மிரட்டினார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி ஏழு ஓவர்களுக்கு 66 ரன்கள் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் அமைத்த பொழுது, ஜான்சன் சார்லஸ் 14 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு முனையில் சரவெடியாய் வெடித்த ஷாய் ஹோப் ஆட்டம் இழக்காமல் 39 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்கள் உடன் 89* ரன்கள் எடுத்தார். நிக்கோலஸ் பூரன் தன் பங்குக்கு 12 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : இந்திய வீரர் பேட்டிங் ஆர்டர மாத்தணும்னா.. இந்த விஷயம் இந்தியாவுக்கு எதிராக இருக்கனும்.. விக்ரம் ரத்தோர் பேட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி 23 பந்துகளில் மட்டும் 64 ரன்கள் குவித்தது. 10.5 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 130 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியை தோற்ற வெஸ்ட் இண்டீஸ் நல்ல ரன் ரேட்டை பெற்று இருக்கிறது. கடைசி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வெஸ்ட் இண்டீஸ் வென்றால் அரை இறுதிக்கு தகுதி பெறலாம். 2012 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் கிறிஸ் கெயில்16 சிக்ஸர்கள் அடித்திருந்தத சாதனையை நிக்கோலஸ் பூரன் உடைத்து 17 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.

- Advertisement -