டி20 உலகக் கோப்பை 2024

நாளை IND-ENG செமி-பைனலில் அச்சுறுத்தும் மழை.. இந்தியாவுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. வானிலை அறிக்கை

ஐசிசி 9வது நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தப் போட்டியில் போட்டியின் போது மழை மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்தான வானிலை அறிக்கை மற்றும் போட்டி ரத்தாவதற்கான வாய்ப்பு யாருக்கு வெற்றி? என்பது குறித்து பார்க்கலாம்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது அறையிறது போட்டியில் கயானா பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் இந்தியா விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை வென்றிருக்கிறது. இங்கிலாந்து இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் தோல்வி மற்றும் ஒன்றில் முடிவு தெரியாமல் இருக்கிறது.

தற்பொழுது கயானாவில் 25 மற்றும் 26ஆம் தேதி தொடர்ந்து இரண்டு நாட்களும் நிற்காமல் கடுமையான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களுடைய பயிற்சியை ஆரம்பிக்க முடியாது என்று தெரிய வருகிறது.

இந்தியா நாளை இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்கு விளையாடுகிறது. ஆனால் அது வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி 27 ஆம் தேதி காலை 10:30 மணி ஆகும். எனவே போட்டிக்கு முந்தைய நாள் மிக கடுமையான மழை இருக்கும் என்பதால், போட்டி காலை குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படுவதும் சந்தேகமான ஒன்றாக மாறியிருக்கிறது.

- Advertisement -

மேலும் போட்டி நடைபெறும் 27 ஆம் தேதி கயானாவில் அதிகபட்சம் 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே நிச்சயமாக போட்டி நேரத்தில் மழை உண்டு. மேலும் இந்தியா காலையில் விளையாடுவதால் போட்டி நேரத்தில் இருந்து மேற்கொண்டு 250 நிமிடங்கள் ரிசர்வ் டே காரணத்திற்காக ஒதுக்கப்படும். தோராயமாக இந்திய நேரப்படி அன்றைய இரவு 5:00 மணி வரையில் நேரம் இருக்கலாம். ஆனால் வெஸ்ட் இண்டீஸில் பிற்பகலில் பெரிய அளவில் மழை பெய்யும் என்பதால் ஊட்டி ரத்து ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் கோலியின் மோசமான பேட்டிங் பார்ம்க்கு.. காரணமே ரோகித் சர்மாவும் இந்திய அணியும்தான்- டிவில்லியர்ஸ் விளக்கம்

மழை கடுமையாகப் பெய்து போட்டி ரத்து செய்யப்பட்டால், சூப்பர் எட்டு சுற்று தோல்வி ஏதும் அடையாமல் எல்லா போட்டிகளையும் இந்திய அணி வென்று இருப்பதால், இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்திருப்பதால், இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். போட்டி ரத்து ஆகவே அதிக வாய்ப்புகள் இருப்பதால் இந்திய அணிக்கு இது அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது!

- Advertisement -
Published by