இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை மகாராஷ்டிரா புனே மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான வானிலை அறிக்கை மற்றும் மைதான புள்ளி விபரங்களை பார்க்கலாம்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது தொடரில் முன்னிலை வகிக்கிறது.
ஆடுகளம் மற்றும் மைதான புள்ளி விவரங்கள்
இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்திருக்கின்ற காரணத்தினால் இரண்டாவது போட்டிக்கான புனே ஆடுகளம் சுழல் பந்துவீச்சு சாதகமாக மெதுவாக அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே இங்கு டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டியது முக்கியம்.
இந்த மைதானத்தில் மொத்தம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன இதில் இந்தியா ஒரு போட்டியில் வெற்றியையும் தோல்வியையும் பெற்றிருக்கிறது. சுழல் பகுதிக்கு சாதகமான இந்த மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணியை இரண்டு முறையும் வெற்றி பெற்று இருக்கிறது.
மழைக் குறுக்கீடு இருக்குமா?
நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெரிய அளவில் மழைக் குறுக்கீடு எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் போட்டி துவங்கும் முதல் நாளில் 50 சதவீதம் வானம் மேகமூட்டமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : என்னை பத்தி நியூஸ் போடறதுக்கு முன்னாடி.. கொஞ்சமாவது இதை செய்யுங்க – ஸ்ரேயாஸ் ஐயர் வேண்டுகோள்
எனவே இது நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உற்சாகமாக அளிக்கக்கூடிய ஒரு செய்தியாக இருக்கிறது. இருந்தபோதிலும் இந்த மைதானத்தில் ஐந்து நாட்களும் டெஸ்ட் போட்டி பெரிய அளவில் எந்தவித தடையும் இல்லாமல் நடைபெறும் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.