“இந்திய அணிக்கு எதிரா நாளை வெற்றி பெறுவோம்.. பவுலிங்ல இந்த திட்டம் இருக்கு” – ஆப்கன் கோச் பேட்டி

0
105
Trott

இந்தியாவில் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், நீண்ட கிரிக்கெட் வடிவத்தில் இங்கிலாந்து போன்ற பெரிய அணி தடுமாற, சிறிய அணியான ஆப்கானிஸ்தான் அணி அவர்களையும் வீழ்த்தி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது.

இதற்கு அடுத்து இந்த மாதத்தில் இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் என்கின்ற அறிவிப்பு வந்த பொழுது, இந்திய அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதான பேச்சுகள் இருந்தது.

- Advertisement -

ஆனால் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஆப்கானிஸ்தான் அணியின் முதுகெலும்பான ரஷித் கான் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்து வருவதால் அணியுடன் இருந்தாலும் கூட விளையாடுவதற்கு களம் இறங்கவில்லை.

இந்தத் தொடரில் தற்போது இரண்டு போட்டிகள் நடைபெற்ற முடிந்து இருக்க, இரண்டு போட்டிகளிலும் இந்திய அணிக்கு எந்தவித பெரிய சவாலையும் கொடுக்காமல், எதிர்பார்ப்புக்கு மாறாக ஆப்கானிஸ்தான் அணி இந்திய அணி இடம் எளிதாகத் தோற்று தொடரை இழந்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான அணியின் 12வது வீரராகவே செயல்படக்கூடிய அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் இங்கிலாந்தின் ஜோனதன் டிராட் நாளைய போட்டி குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நாளை நாங்கள் போட்டியை 40 ஓவர்களுக்கு நெருக்குவதற்கு பார்க்கிறோம். மிடில் ஓவர்களில் இந்திய அணிக்கு நாங்கள் பவுலிங் அழுத்தம் கொடுப்பதற்கு முயற்சி செய்யப் போகிறோம். ஜூன் மாதம் நாங்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட இருக்கிறோம். எனவே வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் நாளை மோதுவது எங்களுக்கு முக்கியம்.

ரஷித் கான் எங்கள் அணியின் மிகவும் செல்வாக்கு மிக்க வீரர். அவர் தற்பொழுது அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். மேற்கொண்டு அவர் சில பரிசோதனைகளுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அவரை இந்த விஷயத்தில் அவசரப்படுத்த முடியாது. அவர் எப்பொழுது திரும்ப கிடைப்பார் என்று உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், சீக்கிரத்தில் அவர் கிடைப்பார்.

சமீபத்தில் நாங்கள் அதிக டி20 கிரிக்கெட் விளையாட வில்லை. நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வடிவத்தில் ரிதத்திற்கு வருகின்றோம். உலக கோப்பைக்கு முன்பாக நாங்கள் ஆசிய கோப்பை மற்றும் அதற்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடினோம். அதற்குப் பின் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படும். நாளை நாங்கள் எல்லாவற்றையும் சரியாக முடிக்க முடியும் என்று நம்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.