இந்திய அணியை ஒருநாள் தொடரில் வீழ்த்துவோம் – ஜிம்பாப்வே வீரர் அதிரடி கருத்து!

0
336
Indvszim

இந்திய அணி வருகின்ற ஆகஸ்ட் 27 ஆம் தேதி யுனைடெட் அரபு எமிரேட்டில் துவங்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கிறது. இந்த தொடருக்கு ரோகித் சர்மா தலைமை தாங்க ஓய்வில் இருந்த விராட்கோலி திரும்ப வருகிறார்.

இந்த ஆண்டில் ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திராணி வெளிநாடு தொடர்களில், அயர்லாந்து இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் உடன் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தது. செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை உருவாக்க இந்தத் தொடர்களை இந்திய அணி நிர்வாகம் மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது.

- Advertisement -

இந்த நாடுகளுடனான தொடர்களின் போது இந்திய முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து பல பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டு டி20 உலகக் கோப்பைக்கான ஒரு முழுமையான இந்திய அணியை உருவாக்குவதில் இந்திய அணி நிர்வாகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இதனால்தான் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் ஆசிய கோப்பையில் விளையாட முடியாமல் போனாலும், அவருக்குப் பதிலாக அர்ஸ்தீப் சிங்கை கொண்டு வர முடிந்திருக்கிறது.

ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை போட்டிக்கு முன்னதாக ஜிம்பாப்வே சென்று 18 20 22 தேதிகளில் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட ஷிகர் தவான் தலைமையில் இளம் இந்திய வீரர்களைக் கொண்ட ஒரு அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் முதலில் கேஎல் ராகுல் இல்லை, பின்பு கேஎல் ராகுல் சேர்க்கப்பட்டு அவரை கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் திடீர் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தத் தொடரைப் பற்றி ஜிம்பாப்வே அணியின் இளம் வீரரான, பங்களாதேஷ் அணியுடன் ஒருநாள் தொடரில் சதமடித்து அசத்திய இன்னொசன்ட் தனது கணிப்பை தெரிவித்து இருக்கிறார். இதுவரை ஜிம்பாப்வே ஜிம்பாப்வே மண்ணில் இந்திய அணி 13 முறை சந்தித்து விளையாடி இருக்கிறது. 2001ஆம் ஆண்டிலிருந்து ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

ஜிம்பாப்வே வீரர் இன்னொசன்ட் கூறும்பொழுது ” என் தனிப்பட்ட கருத்து என்னவென்றால் நாங்கள் இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை 2-1 என வெல்வோம். இதற்கான எனது எளிய திட்டம், நான் அணிக்காக அதிக ரன் எடுத்தவனாக இருக்க விரும்புகிறேன். ஆட்டத்தில் சதங்கள் அடிக்க விரும்புகிறேன். இதுதான் எனது இலக்கு” என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இது சம்பந்தமாகப் பேசிய அவர் ” இது விஷயங்களைப் பற்றியது அல்ல இது மனநிலை பற்றியது. பயிற்சியாளர் டேவிட் ஹூட்டன் அணிக்குள் வந்தபோது, அவர் எங்களிடம் எப்பொழுதும் கூறியது, நேர்மறையான எண்ணத்தோடு கிரிக்கெட் விளையாடுங்கள் என்று தான். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். நாங்கள் ஷாட்கள் விளையாட பயப்பட மாட்டோம். இது மொத்த விஷயத்தையும் மாற்றிவிட்டது. இது சாதாரணமானதுதான் ஆனால் மிகப் பெரிய விஷயம்” என்றும் விளக்கி கூறியிருக்கிறார்!