கௌதம் கம்பீரை நாங்கள் இந்த பெயர் வைத்துத் தான் அழைப்போம் – தலைமை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் நினைவு கூறல்

0
825
Gary Kirsten about Gautham Gambhir

2011ஆம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்றைய நாளில் அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலாக நடைபெற்று முடிந்தது. சுமார் இருபத்தி எட்டு வருட காத்திருப்பிற்கு பலனாக இந்திய அணி 2-வது உலக கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் அவரது பிரம்மாண்ட சிக்சருக்கு பின்னர் கைப்பற்றியது. அந்த தருணம் நம் அனைவராலும் மறக்க முடியாத தருணம்.

அந்தப் போட்டியில் 6.1 ஓவர் முடிவில் இந்திய அணி முக்கிய வீரர்களான விரேந்திர சேவாக்(0) மற்றும் சச்சின் டெண்டுல்கர்(18 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 31 ரன்களுக்கு தடுமாறியது. பின்னர் கௌதம் கம்பீர் மற்றும் எம்எஸ் தோனி இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். கௌதம் கம்பீர் 97 ரன்கள் அடித்தார். அதேபோல மகேந்திர சிங் தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 91* ரன்கள் குவித்தார்.

- Advertisement -
கேரி கிறிஸ்டின் கூறிய வார்த்தைகளை வெளிப்படுத்திய பேடி அப்டன்

அந்தத் தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க வீரர் கேரி கிறிஸ்டின் இருந்தார். அந்த தொடர் முடிவடைந்ததும், தலைமைப் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கம்பீரை ‘தி ராக்’ என்று அழைத்ததாக அணியில் பலம் மற்றும் மனநல பயிற்சியாளராகப் பணியாற்றிய பாடி அப்டன் தெரிவித்துள்ளார்.

அணியில் கௌதம் கம்பீரின் பெயர் ராக் என்றும் தற்பொழுது தெரிய வந்துள்ளது. ஏனெனில் அவர் அந்த இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக இருந்தார். அன்று அவர் ஆடிய ஆட்டம் மகேந்திர சிங் தோனி இறுதியில் வந்து ஆட்டத்தை முடித்து வைக்க உதவியது. அதேபோல சச்சின் மற்றும் சேவாக் இருவரும் அற்புதமான அந்த ஆட்டத்தில் ஆடியதை கம்பீர் உணர வைத்தார். யுவராஜ் சிங் ஆவேசமாக வெற்றி பூரிப்பில் கொண்டாட கௌதம் கம்பீர் காரணமாக இருந்தார்.

குறிப்பிட்ட அந்த போட்டிகள் மட்டுமல்லாது இந்திய அணிக்கு பலமுறை ஒரு ஆணி வேராக நின்று செயல்பட்டிருக்கிறார். அன்று அந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி அடித்த 91* ரன்களுக்கு முன் கம்பீரின் 97 ரன்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. லாங் ஆன் திசையில் சிக்ஸர் அடித்தவர் கம்பீர் இல்லை என்றும் பேடி அப்டன் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ஒருநாள் போட்டிகளில் கௌதம் கம்பீர் 147 போட்டிகளில் விளையாடி 5238 ரன்கள் குவித்திருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் இவர் 34 அரை சதங்கள் மற்றும் 11 சதங்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.