“தோத்துட்டோம்.. ஆனா முடிஞ்சிட்டோம்னு யாரும் கற்பனை பண்ணிடாதிங்க” – தெ.ஆ கேப்டன் தோல்விக்கு பின் சவால் பேச்சு!

0
1609
Bavuma

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று இரண்டாவது அதிர்ச்சி தோல்வி ஒன்று வந்திருக்கிறது. உலகக்கோப்பை தொடர் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!

நேற்று முன்தினம் இங்கிலாந்து அணியை டெல்லி மைதானத்தில் வைத்து ஆப்கானிஸ்தான் அணி வெல்டி அனைவருக்கும் ஆச்சரியத்தையும் கூடவே அதிர்ச்சியையும் கொடுத்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று இமாச்சல் பிரதேசம் தரம்சாலாவில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணி வெகு எளிதாக தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மற்றும் ஒரு அதிர்ச்சி தோல்வியைக் கொடுத்திருக்கிறது.

மழையின் காரணமாக 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 245 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் 78 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியால் அனைத்து விக்கெட்டுகளையும் 42.5 ஓவரில் இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 38 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி தனது முதல் வெற்றியை இந்த உலகக் கோப்பை தொடரில் பெற்றது.

தோல்விக்குப் பின் பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா “ஆறு விக்கெட்டுக்கு 112 ரன்கள் என்று அவர்கள் இருந்த இடத்திலிருந்து நாங்கள் 245 ரன்களுக்கு விட்டிருக்கக் கூடாது. பந்துவீச்சில் நாங்கள் அந்த இடத்திலே தவற விட்டு விட்டோம். ஆனால் நாங்கள் இலக்கை துரத்துவதில் நம்பிக்கை உடன் இருந்தோம்.

எங்கள் பேட்டிங்கில் இருந்த சில குறைபாடுகளை வைத்து அவர்கள் எங்களை வெளியேற்றி விட்டார்கள். நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒழுக்கமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினோம். இன்று அதே தரத்தில் நாங்கள் விளையாடவில்லை.

நாங்கள் எங்கள் வீரர்களுடன் ஒரு ஆலோசனையை நடத்த வேண்டும். நீங்கள் இதில் உணர்ச்சியை உள்ளே வர அனுமதிக்க வேண்டும். இது வலிக்கக் கூடிய ஒன்று.

எங்களுடைய இந்த உலகக் கோப்பை பயணம் முடிந்து விட்டதாக கற்பனையில் கூட நாங்கள் நினைக்கவில்லை. அவர்கள் சிறந்த டிஸ்ப்ளேவை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் எங்களை முழுவதும் அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -