ஹர்திக் பாண்டியாவுக்கு நாங்கள் இதைச் செய்திருக்க கூடாது – வருத்தம் தெரிவித்த மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்

0
305

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி தொடரின் ஆரம்பம் முதல் இறுதி வரை மிக சிறப்பாக விளையாடியது. குஜராத் தலையை மிக சிறப்பாக வழிநடத்தி அதே சமயம் ஒரு ஆல்ரவுண்டர் வீரராக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் மிக சிறப்பாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டார்.

15 ஆட்டங்களில் சராசரியாக 44.27 மற்றும் 131.27 ஸ்ட்ரைக் ரேட்டில் 487 ரன்கள் குவித்திருக்கிறார். அதேபோல பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருக்கிறார். ஹர்திக் பாண்டியா குறித்து பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

உண்மையில் நான் அவரை மிஸ் செய்தேன்

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் முதல் முறையாக வந்த பொழுதே மிகவும் துடிப்புடன் இருப்பார். அவருடன் இணைந்து நான் நிறைய விஷயங்களை பேசியிருக்கிறேன். அவர் ஒரு சிறந்த வீரர். குஜராத் அணிக்கு கேப்டன் பதவியை ஏற்று மிக சிறப்பாக அந்த பணியை செய்து இருக்கிறார்.

உண்மையில் நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் அவரை மிஸ் செய்தேன். அவர் எப்பேர்ப்பட்ட வீரர் என்பதை அனைவருக்கும் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் நிரூபித்து விட்டார். இந்த ஹர்திக் பாண்டியாவை தான் இந்திய அணியின் தேடி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கின்ற ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் நிச்சயம் அறிந்திருப்பார்கள் சேவை இந்திய அணிக்கு தேவை என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறியுள்ளார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய சுனில் கவாஸ்கர்

கேப்டனாக ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை சிறப்பாக தலைமை தாங்கினார். வீரர்களை ஒன்றிணைத்து பேசுவதே அவர்களை சிறப்பாக ஊக்குவிப்பதே என அனைத்து விஷயங்களிலும் ஸ்கோர் செய்துள்ளார். தற்பொழுது இந்திய அணியை ரோஹித் ஷர்மா தலைமை தாங்கி வருகிறார்.

ஹர்திக் பாண்டியா கேப்டனாக இவ்வளவு சிறப்பாக விளையாடுவது அவருக்கான வாய்ப்பை அதிகரிக்கும். நம் திறமையை நிரூபிக்கும் வேலையில் நமக்கான வாய்ப்பு கதவு திறக்கும். வருங்காலத்தில் இந்திய அணியை தலைமை தாங்கும் பொறுப்பு அவரை தேடி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறியுள்ளார்.