இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா மற்றும் அஜிங்கியா ரஹானேவின் இடத்தைக் குறித்து பேட்டி அளித்துள்ள இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்

0
727
Vikram Rathour about Rahane and Pujara

டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில் இந்திய அணியில் புஜாரா மற்றும் ரஹானே மிகவும் முக்கியமானவர்கள். நிறைய போட்டிகளில் இவர்கள் இருவரது சிறப்பான பேட்டிங் காரணமாகவே, நெருக்கடியான நிலையிலிருந்து இந்திய அணி தப்பித்து இருக்கின்றது. மிக சிறப்பாக விளையாடி வந்த இவர்கள் இருவரும் இந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை என்பது தான் வேதனை தரும் செய்தி.

புஜாரா இந்த ஆண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 702 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். 14 டெஸ்ட் போட்டிகளில் வெறும் ஆறு அரைசதங்கள் மட்டுமே இவர் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 28.08 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 34.17 ஆக மட்டுமே இருந்துள்ளது. மறுபக்கம் ரஹானே 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 479 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். வெறும் இரண்டு அரை சதங்களுடன் இந்த ஆண்டு இவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் 20.82 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 43.03 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கு முந்தைய சில ஆண்டுகளில் இவர்கள் இருவரும் இந்திய அணியின் டாப் ஆர்டரில் எதிர் அணிகளுக்கு மிகப்பெரிய குடைச்சலாக இருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டு இவர்கள் இருவரும் அனைத்துப் போட்டிகளிலும் வந்த வேகத்திலேயே அவுட்டாகி, எதிர் அணிகளுக்கு ஃப்ரீ விக்கெட்டாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு கால அவகாசம் தேவை

பல்வேறு இந்திய ரசிகர்கள் இவர்கள் இருவரது ஃபார்ம் குறித்து கேள்வியும் விமர்சனமும் எழுப்பி வரும் நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இவர்கள் இருவரும் படிப்படியாக தங்களுடைய பழைய ஆட்டத்திற்கு திரும்புகின்றனர். இவர்கள் இருவருக்கும் நாம் கால அவகாசம் கொடுத்தாக வேண்டும்.

டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆண்டுக்கு முன்னர் இந்திய அணிக்காக இவர்கள் இருவரின் பங்களிப்பை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது, மறந்து விடவும் கூடாது. இந்த ஆண்டு சிறப்பாக விளையாடவில்லை என்பது உண்மை தான். ஆனால் அவர்கள் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் இருவரும் தங்களால் முடிந்தவரை சிறப்பான பங்களிப்பை ஒவ்வொரு போட்டியிலும் கொடுக்க முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் இருவரின் முன்னேற்றம் கண்கூடாக தெரிகின்றது. படிப்படியாக அவர்கள் இருவரும் தங்களுடைய பழைய ஃபார்மிற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். எனவே நாம் இவர்கள் இருவருக்கும் உரிய கால அவகாசத்தை கொடுத்தாக வேண்டும். அதுவரை நாம் சற்று பொறுமையாக இருப்பதே நல்லது என்று கூறியுள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா முதல் இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் 2வது இன்னிங்சில் 16 ரன்கள் குவித்தார். மறுபக்கம் ரஹானே முதல் இன்னிங்சில் 48 ரன்களும் 2வது இன்னிங்சில் 20 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது