“டி20 உலக கோப்பைக்கு அந்த பையன் வேணும்.. செலக்ட் பண்ணலனா அநியாயம்” – ரெய்னா சோப்ரா கருத்து

0
295
Raina

வருகின்ற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பைத் தொடர் இந்திய அணியில் ரிங்கு சிங் தன்னுடைய பெயரை அழுத்தமாக பதித்து விட்டார்.

மேலும் துவக்க இடத்தில் ஜெய்ஸ்வால், கில், ருத்ராஜ் மற்றும் மிடில் ஆர்டரில் திலக் வர்மா ஆகியோர் இந்திய உலகக்கோப்பை அணிகள் இடம் பெறுவதற்கு தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தை ஜெய்ஷ்வால் தவறவிட்டார். அவருடைய இடத்தில் விளையாடிய கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இதற்கு அடுத்து இரண்டாவது போட்டியில் விளையாடிய ஜெய்ஷ்வால் 34 பந்துகளில் அதிரடியாக 68 ரன்கள் குவித்து மிரட்டி விட்டார். ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு தைரியமாக அடித்த அவர், அந்த இன்டெண்ட்டை கடைசிவரை கைவிடாமல் விளையாடினார்.

இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் ரோஹித் சர்மா உடன் துவக்க வீரராக ஜெயஸ்வால் களம் இறங்குவது சரி என்கின்ற கருத்து பலமாக மாறி இருக்கிறது. அவருடைய ஆட்டமும் அதற்கு ஏற்றார் போல் அதிரடியாக இருக்கிறது.

- Advertisement -

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் அவர் பேட்டிங் செய்யும் விதத்திற்கு டி20 உலகக் கோப்பைக்குப் போகிறார். நீங்கள் அவரை தேர்வு செய்யாவிட்டால் அது அநியாயமான ஒன்றாக இருக்கும். சில சமயங்களில் நீங்கள் அவரை கைவிட முடியாது அவர் தேர்வு செய்வதற்கு தகுதியான வீரர். மேலும் அவர் தற்பொழுது கில்லை தாண்டி விட்டார். எனவே நீங்கள் அவரை இப்பொழுது தொட முடியாது.

பேட்டிங் செய்யும்பொழுது இப்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு செய்தால் அது சரி வராது. மீண்டும் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போலவே மாறும். ஆண்டுகள் மட்டுமே மாறி நம்முடைய அணுகுமுறை மாறாமல் இருந்தால் எதையும் வெல்ல முடியாது” என்று கூறி இருக்கிறார்.

மேலும் இதே கருத்தை வலியுறுத்தி பேசிய சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “அவர் வேலை செய்வதில் மிகவும் ஒழுக்கமான பையன். அதைவிட முக்கியமாக அவர் முதல் பந்தை கண்டு கூட பயப்பட மாட்டார். இதே இன்டெண்டை டி20 உலகக் கோப்பையிலும் காட்டுவார். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அங்கு ஒரு பெரிய சதத்தை அடித்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.