இந்த வீரரை மிகவும் மிஸ் செய்தோம் – கேப்டன் தோனி கூறிய சிஎஸ்கே வீரர்

0
535
MS Dhoni

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. ஏற்கனவே அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்று விட்ட சென்னை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற போராடும் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. ராஜஸ்தான் அணி டாஸ் வென்று சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. சென்னை அணியில் தீபக் சஹாருக்கு பதிலாக ஆசிஃப் என்ற கேரள வீரரும் பிராவோவிற்கு பதிலாக சாம் குர்ரனும் அணியில் சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தான் அணி தோல்வியை தவிர்ப்பதற்காக 5 மாற்றங்களை அணியில் செய்து களம் கண்டது.

முதலில் ஆடிய சென்னை அணிக்கு வழக்கம் போல டுப்லஸ்ஸிஸ் மட்டும் ருத்ராஜ் இணை சிறப்பான துவக்கம் கொடுத்தது. டுப்லஸ்ஸிஸ் அபவுட் ஆனபிறகு ரன் ரேட்டில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் அதனை ருத்துராஜ் இறுதி கட்டத்தில் சிறப்பாக சரி செய்தார். கூடவே ஜடேஜாவும் அதிரடி காட்ட சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 95 ரன்களில் இருந்த ருத்ராஜ் கடைசி பந்தில் சிக்சர் அடித்து சதம் கடந்தார். முதல் இன்னிங்சின் முடிவில் சென்னை அணி 189 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதன்பிறகு களம் கண்ட ராஜஸ்தான் அணிக்கு லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பான அதிரடி துவக்கம் கொடுத்தனர். லீவிஸ் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தாலும் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். 21 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய ஆல்ரவுண்டர் சிவம் துபே சிக்சர்களாக பறக்க விட்டு சென்னை அணியின் வெற்றி கனவை தகர்த்தார்.

4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 42 பந்துகளில் 64 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் துபே. ராஜஸ்தான் அணி 18வது ஓவரிலேயே சென்னை அணி நிர்ணயித்த இலக்கை எட்டியது. இந்த ஆட்டம் குறித்து கடைசியில் பேசிய தோனி இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் பிரதான பந்து வீச்சாளரான தீபக் சஹார் மிஸ் செய்ததாக கூறினார்.

- Advertisement -

பவர் பிளே ஓரங்களில் பந்துவீசி முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்தவர் சஹார். இதுவரை இந்தத் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அடுத்த சுற்று ஆட்டங்களுக்கு சென்னை அணி தகுதி பெற்று விட்டதால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இவரின் சிறப்பை சென்னை அணி நன்கு இன்றைய ஆட்டத்தில் உணர்ந்துள்ளது. அடுத்த போட்டிக்கு தீபக் சஹர் மற்றும் டுவைன் பிராவோ இணைந்து எதிரணியை வீழ்த்துவார்களா என்பதை காண சென்னை அணி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

- Advertisement -