“இங்க இருக்க எல்லாமே எங்களுக்கு நல்லா தெரியும்.. மேட்ச்ல சுவாரசியமான கட்டமே அதுதான்!” – பேட் கம்மின்ஸ் அதிரடியான பேச்சு!

0
449
Cummins

ஆஸ்திரேலியா அணி 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் பயணத்தை இந்திய அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை துவங்க இருக்கிறது!

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை இந்தியாவில் ஒரு நாள் கிரிக்கெட் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்திய மண்ணில் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்கள் இரண்டு முறை ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

வேறு எந்த அணியும் இந்தியாவில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றவில்லை. இந்தியாவின் இரண்டாம் கட்ட அணி உள்நாட்டில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றியே இருந்தது.

மேலும் தற்போது இந்திய அணிக்கு உள்நாட்டு சாதகம் என்பதும் மிகவும் குறைவாகி வருகிறது. ஏனென்றால் பல கிரிக்கெட் நாடுகளில் முன்னணி வீரர்கள் வருடத்திற்கு இரண்டு மாதம் ஐபிஎல் தொடர் விளையாடுவதற்காக இந்திய மண்ணில் முகாமிட்டு பல மைதானங்களுக்கு சென்று விளையாடுகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு இந்திய சூழல் மற்றும் பல மைதானங்களில் நிலைமைகள் தெரிந்திருக்கிறது.

நாளைய போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறும்பொழுது “நேர்மறையான விஷயம் என்னவென்றால் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் இங்கு ஒருசில நல்ல ஒருநாள் கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம். அதனால் நாங்கள் அதை மீண்டும் பெறலாம். இங்குள்ள நிலைமைகள் எங்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

- Advertisement -

இன்று நிறைய விளையாடுவது சந்தேகத்திற்கு இடமின்றி எங்களுக்கு மிகவும் நல்ல விஷயம். உலகக் கோப்பையில் உற்சாகமான ஒரு விஷயம் என்னவென்றால் 14 வீரர்களுடன் தொடர்ச்சியாக இருப்பது போன்ற உணர்வுதான். மேலும் அடுத்த இரண்டு மாதத்தை சிறப்பாக உருவாக்க முயற்சி செய்கிறீர்கள்.

மிடில் ஓவர்களில் பந்து வீசுவது ஒருநாள் கிரிக்கெட்டில் சுவாரசியமான பகுதி. நீங்கள் பகுதி நேர பந்துவீச்சாளர்களை வைத்து ஓவர்களை தள்ள நினைக்கிறீர்களா? இல்லை உங்களது முக்கிய பந்துவீச்சாளர்களை கொண்டு வந்து விக்கெட் எடுக்க நினைக்கிறீர்களா? என்பது முக்கியம். இது போட்டியில் மிகவும் ஒரு சுவாரசியமான கட்டம்!” என்று கூறியிருக்கிறார்!