“சும்மா வரல.. செமி பைனலுக்கு போகணும்னுதான் வந்தோம்..!” – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து கேப்டன் பேச்சு!

0
1444
Netherlands

இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஒவ்வொரு நாளாக சூடு பிடிக்க ஆரம்பித்து சுவாரசியமாக மாற தொடங்கி இருக்கிறது!

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் தொடக்கப்போட்டியில் நியூசிலாந்து அணி எதிர்பார்ப்புக்கு மாறாக இங்கிலாந்தை வீழ்த்தியது.

- Advertisement -

இதற்கு அடுத்து மிக முக்கியமாக இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது, உலகக் கோப்பை தொடருக்கு முதல் பரபரப்பை உண்டு செய்தது. மேலும் எல்லா அணிகளுக்குமான அரையிறுதி வாய்ப்பும் தொடர்ந்தது.

இந்த நிலையில் இன்று நெதர்லாந்து அணி ஆஸ்திரேலியாவை வென்ற தென் ஆப்பிரிக்க அணியை வென்று எல்லோருக்கும் ஆச்சரியத்தை மீண்டும் கொடுத்திருக்கிறது. இதன்மூலம் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு புதிய கதவுகள் அரைஇறுதிக்குத் திறந்து இருக்கின்றன.

- Advertisement -

இன்று நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் 78 ரன்கள் அடிக்க 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் 245 ரன்கள் எடுத்தது.

இலக்கை நோக்கி தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 207 ரன்கள் எடுத்து சுருண்டது. இதையடுத்து நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை நடப்பு உலகக்கோப்பை தொடரில் பதிவு செய்தது.

ஆட்டநாயகன் விருது பெற்ற நெதர்லாந்து கேப்டன் பேசும் பொழுது “இன்னும் சில வெற்றிகள் வரும் என்று நம்புகிறேன். இரண்டு ஆட்டங்களிலும் நாங்கள் ஒழுக்கமான நிலையில் இருந்து அதற்குப் பிறகு சரிந்து தோற்றோம். நாங்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பை பெற முடிவது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஏராளமான ரசிகர்கள் வந்து போட்டியை பார்க்கிறார்கள். எப்போதும் நிறைய ஆதரவாளர்கள் சுற்றி இருக்கிறார்கள். இது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாக எங்களுக்கு அமைந்திருக்கிறது.

நாங்கள் உலகக்கோப்பைக்கு வரும் பொழுது அரைஇறுதிக்கு செல்ல வேண்டும் என்றுதான் வந்தோம். அதைச் செய்ய வேண்டும் என்றால் சில பெரிய அணிகளை வீழ்த்த வேண்டும். இந்த உலகக்கோப்பையில் ஃபேவரைட் அணிகளில் ஒன்றான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது சரியான விஷயம். எனவே இது எங்களுக்கு நல்ல வெற்றியாகும்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -