இந்தியா பவுலிங் சிறப்பா இருந்துச்சுன்னு சொல்லமாட்டேன்; எங்களோட தோல்விக்கு காரணம் இதான் – நியூசிலாந்து கேப்டன் பேட்டி!

0
1618

இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி படுதோல்வியை சந்தித்ததற்கு முக்கிய காரணம் இதுதான் என பேசியுள்ளார் டாம் லேத்தம்.

ராய்ப்பூர் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை குழப்பத்துடன் தேர்வு செய்தார்.

- Advertisement -

இந்த முடிவு சரியாக இல்லையா என்கிற குழப்பத்திலேயே பவுலிங் செய்ய இந்திய வீரர்கள் களமிறங்கினர். எடுத்த முடிவு மிகவும் சரியானது என பந்துவீச்சில் வெளிப்பட்டது.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி 15 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை எடுத்து நியூசிலாந்து வீரர்களை திக்குமுக்காட வைத்தனர். அடுத்து வந்த பிலிப்ஸ், சான்ட்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் மிடில் ஓவர்களில் சற்று விக்கெட் இழக்காமல் அணியை மோசமான ஸ்கோரில் இருந்து மெல்ல மெல்ல மேலே எடுத்துச் சென்றனர்.

நூறு ரண்களைக் கடந்த நியூசிலாந்து அணி 34.3 ஓவர்கள் 108 ரண்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்களில் சமி, ஹர்திக், வாஷிங்டன் ஆகியோர் அபாரமாக பந்து வீசினர்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை பின்தொடர்ந்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் மிகவும் பொறுப்புடன் நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது.

ரோகித் சர்மா 51 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். 21 வது ஓவரில் 111 ரன்கள் அடித்து இலக்கை கடந்த இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 40 ரன்களுடன் கில் களத்தில் இருந்தார்.

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேத்தம் கூறுகையில்,

“எங்களது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. நாங்கள் என்ன செய்தாலும் அது எங்களுக்கு வேலை செய்யவில்லை. அதேநேரம் இந்திய அணி என்ன செய்தாலும் அவர்களுக்கு எடுபட்டது. மைதானத்தில் டென்னிஸ் பந்து பவுன்ஸ் ஆவது போல சில நேரங்களில் பவுன்ஸ் ஆனது. சில இடங்களில் பந்து மேலே எழும்பவில்லை.

இப்படி முன்னுக்கு பின் முரணாக மைதானம் செயல்பட்டதால் எங்களால் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களையும் விக்கெட்டுகளையும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு மைதானம் எப்படி இருக்கிறது என்று சரியாக கணிக்காமல் களம் இறங்கி விட்டோம்.” என பேசினார்.