“ரோகித் டிராவிட் சொன்னா போதும்.. இங்கிலாந்து மாதிரி அதைச் செய்ய தயாராக இருக்கோம்” – கேஎஸ்.பரத் பேச்சு

0
137
Bharat

நாளை இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பது சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது.

மேலும் இங்கிலாந்து அணி புதிய மற்றும் ஆபத்தான ஷாட்களை விளையாடி அதிரடியாக ரன்களை குவித்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களுக்காக இவ்வளவு ஆபத்தான ஷாட்களை விளையாடும் வழியாக இங்கிலாந்து மட்டுமே இருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்தின் இந்த ஆட்ட அணுகுமுறையால் எதிரணிகள் மீதும் அப்படி விளையாட வேண்டிய கட்டாயம் கொஞ்சம் வந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் தங்கள் அணியும் இப்படி விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்க, சில போட்டிகளில் முன்னாள் வீரர்களும் இந்த வகையில் விளையாடினால் நல்லதுதான் என்று பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.

தற்போது இந்திய பேட்ஸ்மேன்களால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் போன்று அச்சமற்ற முறையில் ஆபத்தான ஷாட்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியுமா?என்கின்ற கேள்வி இருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கின்ற இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கேஎஸ்.பரத் “பேட்டர்களாக எங்களுக்கு என்று ஒரு அணுகுமுறை இருக்கிறது. நாங்கள் பந்துவீச்சாளர்கள் யார் என்று பார்த்து விளையாட மாட்டோம். எப்படியான பந்து என்பது பார்த்துதான் விளையாடுவோம்.

- Advertisement -

பொதுவாக இங்கு அனுபவம் இன்மை என்று எதுவும் கிடையாது. ஒரு பந்துவீச்சாளர் சிறப்பாக பந்து வீசினால் அவருக்கான அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும். நாங்கள் எங்களது திட்டங்களைப் பின்பற்றி விளையாடினோம். மேலும் இந்தத் தொடர் 5 போட்டிகள் கொண்டது. நாங்கள் திரும்பி வருவதில் திறமையானவர்கள். எனவே நிச்சயம் மீண்டு வருவோம்.

தற்போதைய ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று நான் பார்க்கவில்லை. ஆனால் ஆடுகளம் எப்படி இருந்தாலும் நாங்கள் அதற்கேற்றவாறு சிறப்பாக விளையாடுவோம். நாங்கள் இந்த சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

இந்திய ஆடுகளங்கள் எனும் பொழுது நாங்கள் இங்கு அதிகம் விளையாடியிருக்கிறோம். எங்களுக்கு ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், பெடல் ஷாட்கள் விளையாடத் தெரியாமல் கிடையாது.

எங்களுக்கு பேட்டராக நாங்கள் எல்லாம் விளையாட முழு சுதந்திரம் இருக்கிறது. முதல் போட்டியில் கூட நாங்கள் இப்படியான சில ஷாட்கள் விளையாடினோம்.

இதையும் படிங்க : பிளேயிங் லெவனை அறிவித்தது இங்கிலாந்து.. இந்திய அணியை வீழ்த்த 2 அதிரடி மாற்றங்கள்

இந்த குறிப்பிட்ட வழியில் விளையாடுவதற்கு அணி நிர்வாகம் எங்களிடம் கேட்டால், நாங்கள் நிச்சயம் இங்கிலாந்து அணி விளையாடியது போல விளையாடுவோம். நாங்கள் அனைவரும் திட்டங்களை வகுத்திருக்கிறோம். யூனிட்டாக ஒன்றாக சேர்ந்து சிறப்பாக செயல்படுவோம்” என்று கூறி இருக்கிறார்.