நியூசிலாந்தை மட்டுமில்ல எல்லா டீமையும் அடிப்போம் – UAE 17 வயது பவுலர் வெற்றிக்குப் பின் பேச்சு!

0
1572
UAE

நேற்று துபாய் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை யுனைடெட் அரபு எமிரேடு அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக பதிவு செய்தது.

நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக யுனைடெட் அரபு எமிரேடுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இளம் வீரர்களைக் கொண்டு டிம் சவுதி தலைமையில் அணி அனுப்பப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த முதல் டி20 போட்டியில் யுஏஇ அணியை மிகவும் கடினப்பட்டு நியூசிலாந்து அணி வென்று இருந்தது. இந்த நிலையில் நேற்று துபாய் மைதானத்தில் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அந்த அணியின் மார்க் சாப்மேன் மிகச் சிறப்பாக விளையாடி 46 பந்தில் 63 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து களம் இறங்கி விளையாடிய யுஏஇ அணிக்கு கேப்டன் வாசிம் அரை சதம் அடிக்க ஆசிப் கான் ஆட்டம் இழக்காமல் 48 ரன்கள் எடுத்து 15.4 ஓவரில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வித்திட்டார்கள்.

- Advertisement -

இந்த வெற்றியில் 17 வயதான இளம் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அயாஸ் அப்சல் கானுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அவர் பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் மேல் வரிசையில் மூன்று விக்கெட்டுகளை துவக்கத்திலேயே வீழ்த்திக் கொடுத்தார்.

வெற்றிக்குப் பிறகு அவர் பேசும் பொழுது
“அது ஒரு நல்ல பந்து, பவர் பிளேவில் அதுவும் எனக்கு அது மிக முக்கிய விக்கெட். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பவர் பிளேவில் பந்து வீச எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததோடு அதில் ஒரு விக்கெட்டும் கிடைத்தது. நான் பேட்ஸ்மேன்களை வெளியேற்ற முயற்சி செய்தேன்.

நான் இப்பொழுது நன்றாக விளையாடி வருகிறேன். எதிர்காலத்திலும் இதுபோன்றே விளையாட விரும்புகிறேன். நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறேன். எதிர்காலத்தில் சிறந்த அணிகளை வீழ்த்தும் திறன் எங்களிடம் இருக்கிறது.

எனது அணி மற்றும் எனது சொந்த செயல் திறனில் நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன்.எப்பொழுது வெற்றி பெறுகிறோமோ, அதை உறுதியுடன் செய்ய வேண்டும் என்று நான் எப்பொழுதும் முயற்சி செய்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்.

தோல்வி அடைந்த நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி கூறும் பொழுது ” ஏராளமான கிரெடிட்ஸ் யு ஏ இ அணிக்கு செல்ல வேண்டும். அவர்கள் எங்களை மூன்று அம்சங்களிலும் விஞ்சினார்கள். டி20 கிரிக்கெட்டில் இது உங்கள் நாள் இல்லை என்றால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எங்களுக்கு தெரியும். முதல் ஆட்டத்தில் இருந்து நாங்கள் தேவையானவற்றை கற்றுக் கொள்ளவில்லை. அதே தவறுகளை திருப்பி செய்தோம். அதற்கான தோல்வியை பெற்றோம். நாங்கள் மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!