கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

நல்லாவே தயாராகி இருக்கோம்; சூர்யாவை கட்டுப்படுத்த திட்டங்கள் இருக்கு; இலங்கை கேப்டன் திட்டவட்டம்!

இந்தியா வந்துள்ள இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி உடன் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நாளை கௌகாத்தி பார்ஸ்பரா மைதானத்தில் மோதுகிறது!

- Advertisement -

இந்தத் தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் நீண்ட காலமாக துவக்க வீரராக இடம் பிடித்து வந்த இடது கை பேட்ஸ்மேன் அனுபவ வீரர் சிகர் தவானுக்கு இடமளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக இடது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இசான் கிசான் இடம் பெற்று இருக்கிறார். பந்துவீச்சில் உம்ரான் மாலிக் அணிக்குள் வந்திருக்கிறார்!

இந்த நிலையில் நாளை நடைபெற இருக்கும் போட்டியில் தன்னுடன் துவக்க ஆட்டக்காரராக இஷான் கிஷான் களமிறங்க மாட்டார் கில் தான் களமிறங்குவார் என்று ரோகித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்திருக்கிறார். மேலும் சூரியகுமார் யாதவ் நடுவரிசையில் இடம்பெறுவது கடினம்தான் என்பதையும் சூசகமாக தெரிவித்து இருக்கிறார்!

இதேபோல் நாளைய போட்டிக்காக பத்திரிகையாளர்களை சந்தித்த இலங்கை அணியின் கேப்டன் டசன் சனகா ” இந்த தொடர் அனைத்து இலங்கையர்களுக்கும் முக்கியமான தொடராகும். ஏனெனில் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில்தான் நடைபெற உள்ளது. இதற்கு ஒரு முன் தயாரிப்பாக இந்த தொடர் இருக்கும். இங்குள்ள நிலைமைகளும் ஒரே மாதிரியாக இருக்கும். இந்தத் தொடரின் முக்கியத்துவத்தை அறிந்துள்ள எங்கள் அணியின் வீரர்கள் அதற்கு ஏற்றவாறு தயாராகி உள்ளார்கள். சமீபகாலங்களில் தென்னாப்பிரிக்க அணியைத் தவிர வேறு எந்த அணியும் உள்நாட்டில் இந்திய அணியை வீழ்த்தவில்லை. மும்பையில் நாங்கள் மிக வலுவாக போராடினோம். அவர்களும் வலுவாக மீண்டு வந்தார்கள். நாங்கள் இன்னும் போட்டி மிகுந்த கிரிக்கெட் விளையாட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்!

- Advertisement -

சூரியகுமார் பற்றிய கேள்விக்கு கருத்து தெரிவித்துள்ள அவர் “இது எல்லா கேப்டன்களுக்கும் தெரிந்த கேள்வி. அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன். அத்தோடு தற்பொழுது மிகவும் சிறந்த பேட்டிங் பார்மில் இருக்கிறார். அவரைக் கட்டுப்படுத்துவது என்பது இது சரியான பகுதிகளில் பந்து வீசுவது மற்றும் உங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்துவதை பற்றியது” என்று கூறி முடித்துக் கொண்டார்!

Published by