டி20 உலகக் கோப்பை 2024

ரோகித் சர்மா அப்பவே இதை சொன்னார்.. இப்ப டி20 உ.கோ இந்திய அணியில் இடம் கிடைச்சிருக்கு – ஷிவம் துபே பேட்டி

இன்று டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் மிகப்பெரிய அதிர்ச்சியாக ரிங்கு சிங் இடம் பெறவில்லை. அதே சமயத்தில் ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வாய்ப்புக் குறித்து அவர் தற்பொழுது கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

டி20 உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும், ஆச்சரியம் அளிக்கும் விதமாக துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஒரே அணியில் இடது கை சுழல் பந்துவீச்சு ஆல்ரண்டர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஷேர் படேல் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா உடன் சேர்த்து ஷிவம் துபேவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவருக்கு விளையாடும் பிளேயிங் லெவனிலும் வாய்ப்பு கிடைப்பதற்கான சாதகமான சூழ்நிலைகள் காணப்படுவது முக்கியமானது. இது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மிடில் வரிசையில் வந்து சுழல் பந்துவீச்சாளர்களை மிக அருமையாக தாக்கி விளையாடி தாக்கத்தை ஏற்படுத்துகிறார். மேலும் அவருக்கு பிரச்சனையாக வேகப் பந்துவீச்சு இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், வேகப்பந்து வீச்சையும் மிகச் சிறப்பாக சந்தித்து விளையாடுகிறார்.

- Advertisement -

தற்போது டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது பற்றி ஷிவம் துபே பேசும் பொழுது “வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டு இருந்தது. அதனால் எனக்கு தூக்கம் வரவில்லை. ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா பாய் என்னிடம் ‘உங்களால் பேட்டிங் மற்றும் பவுலிங் பண்ண முடியும். நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். நீங்கள் உங்களை வெளிப்படுத்த வேண்டும்’ என்று கூறினார். கேப்டன் தன் வீரர் மீது நம்பிக்கையை காட்டுவது என்னை ஊக்கப்படுத்தியது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024.. ப்ளே ஆஃப்க்கு முன்பே கிளம்பும் 8 இங்கிலாந்து வீரர்கள்.. பாதிக்கும் 3 அணிகள்

நான் என்னை ஒருபோதும் யுவராஜ் சிங் உடன் ஒப்பிட்டுக் கொள்ள மாட்டேன். அப்படி செய்வது முட்டாள்தனமானதாக இருக்கும். ஆனால் மக்கள் அப்படி கூறும் போது கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் என்னிடம் கொஞ்சம் அவருடைய பேட்டிங் சாயல் இருக்கிறது. நான் இந்திய அணிக்குள் வந்த பொழுது இதை ரவி சாஸ்திரி அவர்களும் சொன்னார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Published by