நேற்று பாகிஸ்தான் அணி இலங்கை அணி உடன் 345 ரன்களை துரத்தி அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பை வரலாற்றில் இதுவே சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்காகும்!
இந்த போட்டியில் அப்துல்லா ஷபிக் உடன் சேர்ந்து 176 பார்ட்னர்ஷிப்பில் முகமது ரிஸ்வான் இருந்தார். அப்துல்லா ஷபிக் சிறப்பாக விளையாடி 113 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஆனால் முகமது ரிஸ்வான் இறுதிவரை ஆட்டத்தை எடுத்துச் சென்று முடிக்கும் நோக்கத்தில், மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை முடித்தார். நெதர்லாந்து அணிக்கு எதிராகவும் மிகச் சிறப்பாக அவரை அணியை கரை சேர்த்தார்
நேற்று முகமது ரிஸ்வான் 121 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சித்தர்கள் உடன் 13 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்து ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார். அடுத்து அகமதாபாத் கிளம்பும் பாகிஸ்தான் அணி ஹைதராபாத் மைதான ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியாக விடை பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முகமது ரிஸ்வான் கூறும் பொழுது ” எங்களுக்கு இப்பொழுது நல்ல வேகம் இருக்கிறது. நாங்கள் அடுத்து இந்தியாவை சந்தித்து தான் விளையாட இருக்கிறோம். எங்களிடம் நல்ல திட்டம் இருக்கிறது. அவர்களும் அதேபோல் ஒரு திட்டத்துடன் வருவார்கள்.
கூட்டம் கொடுத்த ஆதரவில், நான் ஹைதராபாத்தில் விளையாடியதை ராவல்பிண்டியில் விளையாடியது போல உணர்ந்தேன். அவர்கள் எனக்கு மட்டுமல்ல மொத்த பாகிஸ்தான் அணிக்கும் அன்பை கொடுத்தார்கள். அதே சமயத்தில் அவர்கள் இலங்கை அணியையும் ஆதரித்தார்கள். இரு நாடுகள் விளையாடியதையும் ஆதரித்ததை பார்த்ததற்கு மகிழ்ச்சி. இந்த மக்களுடன் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.
இங்கே உள்ள ஆடுகள அமைப்பாளர் என்னிடம் இரண்டு சதங்கள் இங்கு அடிக்க வேண்டும் என்று கூறினார். இன்றும் நான் அவரை சந்தித்தேன். நம்மால் முடியும் நாம் அவருக்காக ஜெபித்துக் கொள்ள வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!
பாகிஸ்தான அணி இந்திய அணிக்கு எதிராக, அக்டோபர் எட்டாம் தேதி, சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு, உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாட இருக்கிறது!






