கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“நாங்க அரையிறுதிக்கு குறிவைச்சோம்.. இப்ப வேற பக்கம் எய்மை மாத்திட்டோம்!” – இங்கிலாந்துக்கு பிரச்சனை கொடுக்கும் நெதர்லாந்து!

இன்று உத்தரப்பிரதேசம் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், நெதர்லாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த தோல்வியின் மூலமாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியின் அரையிறுதி கனவு முடிவுக்கு வந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை தனது ஆறு போட்டிகளில் நெதர்லாந்து வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த அணியின் பயிற்சியாளர், கேப்டன் மற்றும் வீரர்கள் என அனைவருமே தங்களுடைய இலக்கு அரைஇறுதிதான் என்று ஆரம்பத்தில் இருந்து கூறி வந்தார்கள். அவர்கள் எந்த ஒரு இடத்திலும் ஏதாவது ஒரு சிறு வெற்றியை எதிர்பார்த்து வந்ததாக கூறவில்லை. அவர்களுடைய நோக்கத்திற்கு தகுந்த செயல்பாட்டையும் வெளிப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் இன்று நெதர்லாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக அவர்கள் 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்க இருக்கும் சாம்பியன் டிராபி தொடரை குறி வைத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தத் தொடருக்கு தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியை தவிர்த்து மீதி ஏழு பேர் மட்டுமே தகுதி பெற முடியும். அதாவது நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஏழு இடங்களுக்குள் வரும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும். எனவே நெதர்லாந்து இலக்கை சாம்பியன் டிராபி பக்கம் திருப்பி இருக்கிறது.

இங்கிலாந்து தற்பொழுது ஆறு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருக்கிறது. அதே சமயத்தில் நெதர்லாந்து 7 போட்டிகளில் விளையாட இரண்டு வெற்றி பெற்றிருக்கிறது. இன்னொரு பக்கம் பங்களாதேஷ் 7 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது. எனவே இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷை கீழே தள்ளி, நெதர்லாந்து சாம்பியன் டிராபிக்கு தகுதி பெற முயற்சிக்கிறது.

இது குறித்து நெதர்லாந்து அணியின் கேப்டன் தோல்விக்கு பிறகு பேசும் பொழுது “நாங்கள் நான்கு ரன் அவுட்டுகள் ஆனது சிறந்தது கிடையாது. அதிலிருந்து மீள்வது கடினம். நாங்கள் நன்றாக தொடங்கினோம். முதலில் ஒரு நல்ல இலக்கை கொண்டு வந்தோம். ஆனால் பின்பு விக்கெட்டுகளை இழந்து, அந்த தொடக்கத்தை தவறவிட்டோம்.

ஆப்கானிஸ்தான் அணியிடம் நல்ல உயர்தர சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை எதிர்கொள்ள எங்களிடம் நல்ல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லை.

இந்த மைதானத்தில் இரவில் பனிப்பொழிவு வந்திருந்தாலும் கூட 280 ரன்கள் என்பது நல்ல ரன்களாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் அதற்கான ரன்களை எடுக்கவில்லை. நாங்கள் முன்பு அரைஇறுதிக்கு குறி வைத்தோம். தற்பொழுது நாங்கள் எங்கள் பார்வையை சாம்பியன்ஸ் டிராபி நோக்கி திருப்பி இருக்கிறோம்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -
Published by

Recent Posts