ஐபிஎல் தொடருக்கு முன் வெங்கடேஷ் ஐயருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ள பிரபல மல்யுத்த வீரர் செத் ராலின்ஸ் – வீடியோ இணைப்பு

0
651
Venkatesh Iyer and Seth Rollins

2021 ஐ.பி.எல் சீசன் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கப் போகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையும், கடந்த சீசன் ரன்னருமான கொல்கத்தாவும் மோதுகின்றன.

கொல்கத்தா அணியை எடுத்துக்கொண்டால் சில ஆண்டுகளாகவே அவர்களுக்கு ஓபனிங் ஸ்லாட் பிரச்சினையாகவே இருந்து வந்திருக்கிறது.

- Advertisement -

அவர்களும் உத்தப்பா, லின், நரைன், ராணா, திரிபாட்டி, கில் என்று எல்லோரையும் போட்டு, ஒரு சிறந்த துவக்க ஜோடியை உருவாக்குவதில் தோற்றுக்கொண்டே இருந்தார்கள்.

2021 இந்தியாவில் நடந்த ஒருபாதி ஐ.பி.எல் சீசன் வரையிலுமே அவர்களுக்கு இந்தப் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. இதில் 7 போட்டிகளில் 5 போட்டிகளில் தோற்று அதல பாதாளத்தில் இருந்தது கொல்கத்தா அணி.

அடுத்த மறுபாதி ஐ.பி.எல் சீசன் யு.ஏ.இ-ல் ஆரம்பித்த பொழுதுதான் கொல்கத்தா அணிக்கான யாரும் எதிர்பார்க்காத ஏறுமுகம் ஆரம்பித்தது. ஏறுமுகத்திற்கான காரணம் ஓபனிங்கில் இறங்கி கலக்கிய, மத்திய பிரதேச அணிக்காக ஆடிவரும் வெங்கடேஷ்!

- Advertisement -

தான் விரும்பும் அட்டாக்கிங் கிரிக்கெட்டை பயமில்லாமல் ஆடும் அணியை அமைக்க, கொல்கத்தாவின் தலைமைப் பயிற்சியாளர் மெக்கல்லம் என்னென்னவோ செய்து பார்த்தும் பயனில்லை. ஆட்டத்தில் வீரர்களிடம் தைரியமான அணுகுமுறையே வெளிப்படவில்லை. மெக்கல்லம் கடைசியாக “அதிரடியாய் ஆட போய் முதல் பந்திலேயே அவுட் ஆனாலும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறியும் பயனில்லை.

அப்பொழுதுதான் வலைப்பயிற்சியில் பந்துகளைத் தைரியமாய் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த, மத்திய பிரதேசத்துக்காக மத்திய வரிசையில் ஆடும் இளைஞர் வெங்கடேஷ் மெக்கல்லமின் கவனத்தை ஈர்க்கிறார். அவரிடம் பேசி தொடர்ந்து பயிற்சியளித்து துவக்க ஆட்டக்காரராகவும் களமிறக்கி சாதிக்க வைத்தார் மெக்கல்லம். கடந்த சீசனில் 10 மேட்ச்களில் 370 ரன்களை 41.10 சராசரியில் அடித்திருந்தார் வெங்கடேஷ். சில ஆண்டுகளுக்கு முன்னான கொல்கத்தா அணியை வெங்கடேஷிற்கு முன், பின் என்றுதான் பிரிக்க வேண்டும். அணிக்குள் அவர் உருவாக்கிய தாக்கம் அப்படியானது.

கடந்த சில தினங்களுக்கு முன்னால் வெங்கடேஷ் WWE பற்றியான பேட்டியில் தான் சீத் ரோலன்ட்சின் இரசிகனென்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் அவர் எதிர்பார்க்காத வகையில் WWE சூப்பர் ஸ்டார் சீத் ரோலன்ட்ஸிடம் இருந்து வெங்கடேசிற்கு வாழ்த்துச் செய்தி வந்துள்ளது.

அந்த வாழ்த்துச் செய்தியில் “மை மேன், என் தொலைநோக்குப் பார்வை, புரட்சியாள சிந்தனைகள் இவையெல்லாம்தான் சேத் ரோலன்ஸ். இதுதான் நான். இதனால் எனக்கு நீங்கள் விசிறியாய் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இப்பொழுது உங்களுக்கு இந்தியன் ப்ரீமியர் லீக்கில் முன்னேறி போவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. நீங்கள் கோப்பையை வெல்ல என் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் தேவைப்படுகிறது. தயாராகிக்கொள்ளுங்கள் என் விசாலப்பார்வையின் ஆசிர்வாதங்கள் மெய்ப்ப்படுவதற்கு. உங்களை ஒப்புக்கொடுத்து விளையாட்டை வெல்லுங்கள்!” என்று கூறியிருக்கிறார் WWE சேத் ரோலன்ஸ்!